galaxy fold

வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு ரூபாய் 1.50 லட்சம் முதல் ரூ.1.75 லட்சம் வரையிலான விலையில் வெளியாக உள்ளது.

மடிக்ககூடிய சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு ரூ .1.5 லட்சம் முதல் ரூ .1.75 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் என்று IANS செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மாடல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகள் மூலம் கிடைக்கும், மேலும் முன்பதிவு மூலம் மட்டுமே கிடைக்கும். கூடுதலாக, இந்த மொபைலுக்கு சிறப்பு வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகளுக்கான பிரத்யேக அணுகலுடன், சாம்சங் நிபுணர்களுடன் தொடர்பு கொள்ள ஆன்லைனில் அல்லது தொலைபேசியில் 24/7 ஆதரவு மையம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.

Samsung Galaxy Fold ஸ்மார்ட்போனின் வசதிகள்

7.3 அங்குல QXGA+ இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED 1536×2152 பிக்சல்ஸ் டிஸ்பிளேவாக விரிவடைகிறது. அதனை தொடர்து மொபைலை மடக்கிய நிலையில் பயன்படுத்த 4.7 அங்குல சூப்பர் AMOLED கொண்டு 840×1960 பிக்சல்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

7nm குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் என குறிப்பிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஃபோல்டில் 12 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி சேமிப்பை கொண்டு கூடுதலாக விரிவாக்க எஸ்டி கார்டு வழங்கப்படவில்லை. இந்த மொபைல் போனில் மொத்தமாக 6 கேமரா சென்சார்கள் இணைக்கபட்டுள்ளது.

விரைவில்., ரூ.1.50 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்தியாவில் அறிமுகம்

பின்புறத்தில் மூன்று கேமராக்களை பெற்றுள்ளது. அதாவது அதாவது 12-megapixel f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12-megapixel f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு மற்றும் 16-megapixel f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.

முழுமையான 7.3 அங்குல திரை சமயத்தில் 10MP செல்ஃபி F2.2 மற்றும் வீடியோ காலிங் கேமரா உடன் கொண்டதாக அமைந்துள்ளது. மடித்த நிலையில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 10MP செல்ஃபி F2.2 மற்றும் 8 MP RGB கேமரா சென்சார் பெற்றதாக உள்ளது.  இரண்டு பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 4,380mAh பேட்டரியை கொண்டதாக அமைந்துள்ளது.

விரைவில்., ரூ.1.50 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்தியாவில் அறிமுகம்