இரட்டை கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7 டியோ விற்பனைக்கு வந்தது

செல்ஃபீ படங்களை பெறுவதற்கு எல்இடி ஃபிளாஷ் பெற்று விளங்கும் சாம்சங் கேலக்ஸி J7 டியோ மொபைல் போன் ரூ.16,990 விலையில் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் இரட்டை கேமரா வசதி பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி J7 டியோ

சாம்சங் மொபைல் போன் தயாரிப்பாளரின், புதிய கேல்க்ஸி ஜே7 டியோ மொபைல் போன் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி கருப்பு மற்றும் கோல்டு ஆகிய இரு நிறங்களுடன், 4G லோல்டிஇ, வை-ஃபை 802.11 a/b/g/n/ac (டுயல் பேன்ட் 2.4GHz மற்றும் 5GHz), ப்ளூடுத் v4.2, ஜிபிஎஸ், மற்றும் Glonass ஆகியவற்றுடன் அக்ஸலரோமீட்டர், கைரேகை சென்சார் (ஹோம் பட்டனில்) மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது.

5.5 அங்குல எச்டி திரையை பெற்று 720×1280 பிக்சல் தீர்மானத்தை கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது Exynos 7 தொடர் உடனான ஆக்டா- கோர் செயலி மற்றும் 4ஜிபி ரேம் உடன் இணைந்து 32ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டிருப்பதுடன் கூடுதலாக 256ஜிபி வரை நீட்டிக்கும் திறன் பெற்றுள்ளது.

கேமரா பிரிவில் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு எல்இடி ஃபிளாஷ் ஆதரவினை பெற்றுள்ளது. அதே போல பிரைமரி கேமராவில் 12மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரு கேமராக்களை பெற்று ஃபேஸ் அன்லாக உள்ளீட்ட வசதிகளை கொண்டுள்ளது.

புதிய சாம்சங் கேல்க்ஸி ஜே7 டியோ மொபைல் விலை ரூ.16,990