சாம்சங் கேலக்ஸி M01, கேலக்ஸி M11 விற்பனைக்கு வெளியானது

சாம்சங் வெளியிட்டுள்ள கேலக்ஸி M01 மற்றும் கேலக்ஸி M11 என இரு மாடல்களும் மிக சிறப்பான செயல்திறனுடன் ரூ.8,999 ஆரம்ப விலையில் துவங்குகின்றது. கேலக்ஸி எம் 11 மாடலில் 5,000mAh பேட்டரியை கொண்டு 15 வாட்ஸ் விரைவு சார்ஜர் வசதி உள்ளது. ஃபிளிப்கார்ட் மூலமாக இன்றைக்கு 3 மணி முதல் விற்பனை துவங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி M01

5.7 அங்குல HD+ திரையுடன் வாட்டர் டிராப் ஸ்டைல் டிசைனுடன் 720×1560 பிக்சல்ஸ் தீர்மானத்தைக் கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி சேமிப்பு பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M01 பிரைமரி கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை டூயல் கேமரா கொண்டு முன்னணியாக 13 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 எம்பி கேமரா கொண்டிருக்கின்றது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமாக 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் ஆதரவை பெற்ற சாம்சங் கேலக்ஸி M01 மாடலில் 4G, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, மற்றும் GPS/ A-GPS பெற்றதாகவும், மிகவும் திறன் வாய்ந்த 4,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம் 01 விலை 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி மாடல் – ரூ.8,999 க்கு வெளியாகியுள்ளது. இந்த மொபைல் நீலம், கருப்பு, சிவப்பு நிறங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி M11

6.4 அங்குல HD+ திரையுடன் பஞ்ச் ஹோல் டிசைனுடன் 720×1560 பிக்சல்ஸ் தீர்மானத்தைக் கொண்டு ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் உடன் 32ஜிபி , 64ஜிபி என இரு விதமான சேமிப்பு பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரைமரி கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை டிரிப்ள் கேமரா கொண்டு முன்னணியாக 13 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் வைட் ஏங்கிள் ஷாட் சென்சார் இடம்பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமாக 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M11 மொபைலில் டூயல் சிம் கார்டு, பின்புற கைரேகை சென்சார் ஆதரவுடன் 512 ஜிபி வரை மெமரி திறனை நீட்டிக்கும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவினை கொண்டதாக அமைந்துள்ளது. 4G, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, மற்றும் GPS/ A-GPS பெற்றதாகவும், மிகவும் திறன் வாய்ந்த 5,000mAh பேட்டரியை கொண்டு 15 வாட்ஸ் விரைவு சார்ஜர் வசதியைக் கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி M11 விலை 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி மாடல் – ரூ.10,999 க்கும், 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மாடல் ரூ.12,999 விலையில் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் நீலம், கருப்பு, வைலட் நிறங்களில் கிடைக்கும்.