வரும் ஜனவரி 28ந் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எம்10 மொபைல் ஆரம்ப விலை ரூ.7,990 என நிர்ணயம் செய்யப்பட உள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்20 விலை ரூ. 10,990 என தொடங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்10

ஷியோமி உட்பட சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் பல்வேறு அம்சங்களை பெற்ற மொபைலாக கேலக்ஸி எம் சீரிஸ் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாட்டர் டிராப் நாட்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவை பெற்ற 6.2-inch ஹெச்டி+ திரையுடன் ,  Exynos 7872 SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற 2 ஜி.பி. மற்றும் 3 ஜி.பி. ரேம் என இருவிதமான மாறுபாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

கேமரா பிரிவில் மிகவும் உயர் தரமான படங்களை பெற பின்புறத்தில் இரட்டை கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பெற்ற சாம்சங் கேலக்ஸி எம் 10 , அடுத்த சில மாதங்களில் ஆண்ட்ராய்டு 9.0 பை வெர்ஷனுக்கு அப்டேட் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த மொபைலில் 3,400mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம்10 விலை பட்டியல்

சாம்சங் கேலக்ஸி எம் 10  2 GB / 16 GB – ரூ.7,990

சாம்சங் கேலக்ஸி எம் 10  3 GB / 32 GB – ரூ.9,490

சாம்சங் கேலக்ஸி எம்20

வாட்டர் டிராப் நாட்ச் இன்ஃபினிட்டி வி டிஸ்பிளேவை பெற்ற 6.2-inch ஹெச்டி+ திரையுடன் ,  Exynos 7904 SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற 3 ஜி.பி. மற்றும் 4 ஜி.பி. ரேம் என இருவிதமான மாறுபாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

கேமரா பிரிவில் மிகவும் உயர் தரமான படங்களை பெற பின்புறத்தில் இரட்டை கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பெற்ற சாம்சங் கேலக்ஸி எம் 10 , அடுத்த சில மாதங்களில் ஆண்ட்ராய்டு 9.0 பை வெர்ஷனுக்கு அப்டேட் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும்.

samsung-m-series teaser-released

சாம்சங் கேலக்ஸி எம் 20 விலை பட்டியல்

சாம்சங் கேலக்ஸி எம் 20  3 GB / 32 GB – ரூ.10,990

சாம்சங் கேலக்ஸி எம் 20  4 GB / 64 GB – ரூ.12,990