Samsung M Series : 7,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் புதிய சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் போன் வரிசையில் ரூ.7,990 விலையில் சாம்சங் கேலக்ஸி எம்10 , ரூ.10,990 விலையில் சாம்சங் கேலக்ஸி எம்20 என இரு மொபைல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி பெற்ற மொபைலாக கேலக்ஸி எம்20 விளங்குகின்றது.

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ்

இளைய தலைமுறை ஸ்மார்ட்போன் பயனாளர்கள் விரும்பும் அம்சங்களை வழங்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள புதிய சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் மொபைல் போன் வரிசையில் கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்10 என இரு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Samsung M Series : 7,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 விற்பனைக்கு வந்தது

சாம்சங் கேலக்ஸி M10

இன்ஃபினிட்டி V டிஸ்பிளேவை பெற்ற 6.22 இன்ச் ஹெச்டி பிளஸ் TFT திரையுடன் , 720×1520 தீர்மானத்துடன், சாம்சங்கின் Exynos 7870 SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் என இருவிதமான மாறுபாட்டில் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி என இருவகையான உள்ளடக்க சேமிப்பில் விற்பனைக்கு வரவுள்ளது.

கேமரா பிரிவில் மிகவும் உயர் தரமான படங்களை பெற பின்புறத்தில் இரட்டை கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்கின்றது

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பெற்ற சாம்சங் கேலக்ஸி எம் 10, மேலும் இந்த மொபைலில் 3,400mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும்.

சாம்சங்கின் கேலக்ஸி M10 மொபைல் போன் 2 GB உடன் 16 GB விலை ரூபாய் 7,990 மற்றும் கேலக்ஸி M10  3 GB உடன் 32 GB விலை ரூபாய் 8,990 என அமைந்திருக்கின்றது.

Samsung M Series : 7,990 ரூபாய்க்கு சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 விற்பனைக்கு வந்தது

சாம்சங் கேலக்ஸி M20

இன்ஃபினிட்டி V டிஸ்பிளவினை பெற்ற சாம்சங் கேலக்ஸி M20 மொபைல் போன், பெற்ற 6.3 இன்ச் ஹெச்டி+ திரையுடன் , 1080×2340 தீர்மானத்தை பெற்று, சாம்சங்கின் எக்ஸ்னோஸ் 7904 SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என இருவிதமான 32ஜிபி மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

கேமரா பிரிவில் மிகவும் உயர் தரமான படங்களை பெற பின்புறத்தில் இரட்டை கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பெற்ற சாம்சங் கேலக்ஸி M20 , அடுத்த சில மாதங்களில் ஆண்ட்ராய்டு 9.0 பை வெர்ஷனுக்கு அப்டேட் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி இடம்பெற்றிருக்கின்றது மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற ஃபாஸ்ட் சார்ஜ்ர் நுட்பத்தை பெற்றிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி M சீரிஸ் விலை பட்டியல்

சாம்சங் கேலக்ஸி M10  2 GB / 16 GB – ரூ.7,990

சாம்சங் கேலக்ஸி M10  3 GB / 32 GB – ரூ.8,990

சாம்சங் கேலக்ஸி M20  3 GB / 32 GB – ரூ.10,990

சாம்சங் கேலக்ஸி M20  4 GB / 64 GB – ரூ.12,990

இரு மொபைல்களும் நீலம் மற்றும் கருப்பு இரு நிறங்களில் கிடைக்க உள்ளது. அமேசான் இந்தியா இணையதளத்தில் பிப்ரவரி 5ந் தேதி பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.