சாம்சங் கேலக்ஸி M10, கேலக்ஸி M20 மொபைல் விலை வெளியானது

ஷியோமி உட்பட சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு சவால் விடும் வகையில் வரவுள்ள சாம்சங் கேலக்ஸி M வரிசையில் சாம்சங் கேலக்ஸி M10,  சாம்சங் கேலக்ஸி M20 மற்றும் சாம்சங் கேலக்ஸி M30 என மூன்று ஸ்மார்ட்போன்கள் வரவுள்ளது.

மில்லியனல்ஸ் எனப்படும் 22 முதல் 35 வயது இளையோரை குறிவைத்து , சாம்சங் கேலக்ஸி M10, சாம்சங் கேலக்ஸி M20 மற்றும் சாம்சங் கேலக்ஸி M30 என இரு மொபைல் போன்கள் குறைந்த விலையில் நவீன வசதிகளை பெற்றதாக வெளியாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M சீரிஸ்

இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கி வந்த கொரியாவின் சாம்சங் நிறுவனம், சீன மொபைல் நிறுவனங்களின் குறைந்த விலை மொபைல் ஆதிக்கம் அதிகரித்த உடன் சந்தையின் மதிப்பை இழக்க தொடங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் தயாரிபாளராக சீனாவின் ஷியோமி விளங்குகின்றது.

குறைந்த விலையில் பல்வேறு நவீன வசதிகளை அறிமுகம் செய்யும் நோக்கில் வெளியாக உள்ள கேலக்ஸி எம் வரிசை மொபைலில் முதற்கட்டமாக கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 என மூன்று மாடல்களும் முதன்முறையாக இந்திய மொபைல் சந்தையில் வெளியிடப்பட்ட பிறகே சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக வரவுள்ள சாம்சங் கேலக்ஸி M30 போன் மூன்று பின்புற கேமராவை பெற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி M20

கேலக்ஸி எம்20 மொபைல் போனில்  இன்ஃபினிட்டி V டிஸ்பிளே அம்சத்தை பெற்ற 6.13 இன்ச் திரையை பெற்று சாம்சங்  Exynos 7904 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் பெற்றதாக விளங்கலாம் இதில் உள்ளடக்க மெமரியாக 32 ஜிபி மற்றும் 64 ஜிபி பெற்று விளங்கலாம் என கூறப்படுகின்றது.

பின்புறத்தில் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இருவிதமான கேமரா தேர்வுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றிருக்கும். முன்புறத்தில் செல்பீ மற்றும் வீடியோ அழைபுகளுக்கு என 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு இருக்கலாம்.

முக்கிய அம்சமாக கேலக்ஸி M20 மொபைலில் 5,000mAh திறன் பெற்ற பேட்டரி இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி M20 மொபைல் போன் விலை ரூ. 15,000 க்குள் அமைந்திருக்கும்.

சாம்சங் கேலக்ஸி M10, கேலக்ஸி M20 மொபைல் விலை வெளியானது

சாம்சங் கேலக்ஸி M10

கேலக்ஸி எம்10 மொபைல் போனில்  இன்ஃபினிட்டி V டிஸ்பிளே அம்சத்தை பெற்ற 6.05 இன்ச் திரையை பெற்று சாம்சங் எக்சைனோஸ் 7870 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் பெற்றதாக விளங்கலாம் இதில் உள்ளடக்க மெமரியாக 16 ஜிபி மற்றும் 32 ஜிபி பெற்று விளங்கலாம் என கூறப்படுகின்றது.

பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமரா தேர்வுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றிருக்கும். முன்புறத்தில் செல்பீ மற்றும் வீடியோ அழைபுகளுக்கு என 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டு இருக்கலாம்.

முக்கிய அம்சமாக கேலக்ஸி M10 மொபைலில் 3, 400mAh திறன் பெற்ற பேட்டரி இடம்பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி M10 மொபைல் போன் விலை ரூ. 8,500 க்குள் அமைந்திருக்கும்.

இதைத்தவிர இந்த மாடலை விட குறைந்த அம்சங்களை பெற்ற சாம்சங் கேலக்ஸி M10 மொபைல் போன் ரூ.9,500 விலையில் அமைந்திருக்கும். இதைத் தவிர கேலக்ஸி எம்30 மொபைல் போன் விலை ரூ.17,000 க்குள் அமைந்திருக்கலாம்.