samsung-m-series teaser-released

பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களை பெற்ற மாடலாக வரவுள்ள சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் வரிசையின் சாம்சங் கேல்ஸி எம்10 ரூ.7990 மற்றும் சாம்சங் கேல்ஸி எம்20 ரூ.10,990 என தொடங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ்

சர்வதேச அளவில் முதன்முறையாக இந்தியாவில் வெளியிடப்படுகின்ற கேலக்ஸி எம் சீரிஸ் , பட்ஜெட் விலையில் விற்பனை செய்யபடுகின்ற சீன மொபைல் தயாரிப்பாளர்களுக்கு கடும் நெருக்கடியை வழங்கும் மாடலாக விளங்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

சமீபத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேலக்ஸி எம் வரிசை மொபைலின் வையட் ஏங்கிள் கேமரா குறித்தான டீசரை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கேலக்ஸி எம்10, எம்20 ஸ்மார்ட்போன் விலை மற்றும் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது.

\

சாம்சங் கேலக்ஸி M10

வாட்டர் டிராப் நாட்ச் இன்ஃபினிட்டி V டிஸ்பிளேவை பெற்ற 6.2-inch ஹெச்டி+ திரையுடன் , 720×1520 தீர்மானத்துடன், சாம்சங்கின் Exynos 7870 SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற 2 ஜிபி மற்றும் 3 ஜிபி ரேம் என இருவிதமான மாறுபாட்டில் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி என இருவகையான உள்ளடக்க சேமிப்பில் விற்பனைக்கு வரவுள்ளது.

கேமரா பிரிவில் மிகவும் உயர் தரமான படங்களை பெற பின்புறத்தில் இரட்டை கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பெற்ற சாம்சங் கேலக்ஸி எம் 10 , அடுத்த சில மாதங்களில் ஆண்ட்ராய்டு 9.0 பை வெர்ஷனுக்கு அப்டேட் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த மொபைலில் 3,400mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும்.

சாம்சங்கின் கேலக்ஸி M10 மொபைல் போன் 2 GB / 16 GB விலை ரூபாய் 7,990 மற்றும் கேலக்ஸி M10  3 GB / 32 GB விலை ரூபாய் 8,990 என அமைந்திருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி M20

வாட்டர் டிராப் நாட்ச் இன்ஃபினிட்டி V டிஸ்பிளவினை பெற்ற சாம்சங் கேலக்ஸி M20 போன், பெற்ற 6.3 இன்ச் ஹெச்டி+ திரையுடன் , 1080×2340 தீர்மானத்தை பெற்று, சாம்சங்கின் எக்ஸ்னோஸ் 7885 SoC சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் என இருவிதமான 32ஜிபி மற்றும் 64 ஜிபி உள்ளடக்க மாறுபாட்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

கேமரா பிரிவில் மிகவும் உயர் தரமான படங்களை பெற பின்புறத்தில் இரட்டை கேமரா 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றதாக வந்துள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பெற்ற சாம்சங் கேலக்ஸி M20 , அடுத்த சில மாதங்களில் ஆண்ட்ராய்டு 9.0 பை வெர்ஷனுக்கு அப்டேட் வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி இடம்பெற்றிருக்கும். மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற ஃபாஸ்ட் சார்ஜ்ர் நுட்பத்தை பெற்றிருக்கும்.

சாம்சங்கின் கேலக்ஸி M20 ஸ்மார்ட்போன் 3 GB / 32 GB மாடல் விலை ரூபாய் 10,990 மற்றும் கேலக்ஸி M20 மொபைல் போன் விலை 4 GB / 64 GB ரூபாய் 12,990 ஆகும்.

சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை பட்டியல்

சாம்சங் கேலக்ஸி M10  2 GB / 16 GB – ரூ.7,990

சாம்சங் கேலக்ஸி M10  3 GB / 32 GB – ரூ.8,990

சாம்சங் கேலக்ஸி M20  3 GB / 32 GB – ரூ.10,990

சாம்சங் கேலக்ஸி M20  4 GB / 64 GB – ரூ.12,990

எங்கே வாங்கலாம்

அமேசான் இந்தியா இணையதளத்தில் ஜனவரி 28ந் தேதி (நாளை) அதிகார்வப்பூர்வமாக கேலக்ஸி எம் சீரிஸ் வரிசை இந்தியாவில் வெளியிடப்படுகின்றது. இதனை தொடர்ந்து கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 மொபைல் விற்பனை பிப்ரவரி 5ந் தேதி முதல் தொடங்கப்படலாம். முதற்கட்டமாக பிரத்தியேகமாக அமேசான் மற்றும் முக்கிய ரீடெயில்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.