ஜூன் 02.., சாம்சங் கேலக்ஸி M11, சாம்சங் கேலக்ஸி M01 விற்பனைக்கு அறிமுகம்

வரும் ஜூன் 2 ஆம் தேதி புதிய சாம்சங் கேலக்ஸி M11 மற்றும் சாம்சங் கேலக்ஸி M01 என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக டீசரை ஃபிளிப்கார்ட் மூலமாக சாம்சங் வெளியிட்டுள்ளது.

தொடக்கநிலை மாடலாக வரவுள்ள கேலக்ஸி எம் 01 மாடல் பட்ஜெட் விலையிலும், அடுத்ததாக முந்தைய கேலக்ஸி எம்10 , எம்10எஸ் என இரு மாடல்களில் மேம்படுத்தப்பட்டதாக கேலக்ஸி எம்11 விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரு மாடல்களும் ஜூன் 2 ஆம் தேதி பகல் 12.00 மணிக்கு ஃபிளிப்கார்டில் விலை அறிவிக்கப்பட உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M11

அரபு அமீரகத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி எம் 11 மொபைல் போன் 6.4 அங்குல HD+ திரையுடன் பஞ்ச் ஹோல் டிசைனுடன் 720×1560 பிக்சல்ஸ் தீர்மானத்தைக் கொண்டு ஆக்டோ கோர் சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 4ஜிபி ரேம் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இது திறனுடன் தான் இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரைமரி கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை டிரிப்ள் கேமரா கொண்டு முன்னணியாக 13 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் வைட் ஏங்கிள் ஷாட் சென்சார் இடம்பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமாக 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M11 மொபைலில் டூயல் சிம் கார்டு, பின்புற கைரேகை சென்சார் ஆதரவுடன் 512 ஜிபி வரை மெமரி திறனை நீட்டிக்கும் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவினை கொண்டதாக அமைந்துள்ளது. 4G, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, மற்றும் GPS/ A-GPS பெற்றதாகவும், மிகவும் திறன் வாய்ந்த 5,000mAh பேட்டரியை கொண்டு 15 வாட்ஸ் விரைவு சார்ஜர் வசதியைக் கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி M11 விலை 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி மாடல் – ரூ.10,999 க்கும், 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி மாடல் ரூ.12,999 விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி M01

குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலாக வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி M01 பிரைமரி கேமரா ஆப்ஷனை பொறுத்தவரை டூயல் கேமரா கொண்டு முன்னணியாக 13 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமாக 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட உள்ளது.

5.7 அங்குல HD+ திரையுடன் வாட்டர் டிராப் ஸ்டைல் டிசைனுடன் 720×1560 பிக்சல்ஸ் தீர்மானத்தைக் கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் கொண்டு இயக்கப்பட்டு 3 ஜிபி ரேம் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டூயல் சிம் ஆதரவை பெற்ற சாம்சங் கேலக்ஸி M01 மாடலில் 4G, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் 4.2, மற்றும் GPS/ A-GPS பெற்றதாகவும், மிகவும் திறன் வாய்ந்த 4,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எம் 01 விலை 3 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி மாடல் – ரூ.8,999 க்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.