ரூ.7,990 விலையில் வெளியிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி M10 மொபைல் உடன் சாம்சங் கேலக்ஸி M20 ஸ்மார்ட்போன் மாடலை ஒப்பீட்டு முக்கிய வித்தியாசங்களை அறிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி M20 Vs சாம்சங் கேலக்ஸி M10
சீனாவின் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் ரக மொபைல்கள், ஓப்போவின் ரியல்மி மொபைல் உட்பட பல்வேறு பட்ஜெட் மொபைல்களுக்கு மிகுந்த சவாலினை ஏற்படுத்தும் மாடலாக புதிய கேலக்ஸி எம் சீரிஸ் வெளியிடப்பட்டுள்ளது.
இரு மொபைல் போன்களும் மிக சிறப்பான செயல் திறன் வெளிப்படுத்தும் இந்நிறுவனத்தின் சொந்த சிப்செட் உடன் டூயல் கேமரா ஆப்ஷன் உட்பட கேலக்ஸி எம்20 மொபைலில் பவர்ஃபுல்லான 5000mAh பேட்டரி இடம் பெற்றுள்ளது.
அமேசான் இந்தியா வாயிலாக இன்றைக்கு பிரத்தியேகமாக பிப்ரவரி 5ந் தேதி முதல் பகல் 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இரு மொபைல்களுக்கு இடையிலான வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம்.
கேலக்ஸி M20 Vs கேலக்ஸி M10 – வித்தியாசம்
நுட்பம் | சாம்சங் கேலக்ஸி M10 | சாம்சங் கேலக்ஸி M20 |
டிஸ்பிளே | 6.22-inch HD+ இன்ஃபினிட்டி V டிஸ்பிளே | 6.3-inch FHD+இன்ஃபினிட்டி V டிஸ்பிளே |
பிராசஸர் | 1.6GHz ஆக்டோ-கோர் Exynos 7870 | 1.8Ghz ஆக்டோ-கோர் Exynos 7904 |
ரேம் | 2GB மற்றும் 3GB ரேம் | 3GB மற்றும் 4GB ரேம் |
சேமிப்பு | 16GB மற்றும் 32GB | 32GB மற்றும் 64GB |
ரியர் கேமரா | 13MP கேமரா f/1.9 & 5MP கேமரா 120 டிகிரி அல்ட்ரா வைட் ஏங்கிள் | 13MP கேமரா f/1.9 & 5MP கேமரா 120 டிகிரி அல்ட்ரா வைட் ஏங்கிள் |
முன் கேமரா | 5MP f/2.0 இன் டிஸ்பிளே ஃபிளாஷ் | 8MP f/2.0 இன் டிஸ்பிளே ஃபிளாஷ் |
பேட்டரி | 3400mAh (Gadgets Tamilan) | 5000mAh |
ஓஎஸ் | ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ | ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ |
நிறம் | நீலம் மற்றும் கருப்பு | நீலம் மற்றும் கருப்பு |
விலை | 2GB+16GB -ரூ.7,990 & 3GB+32GB – ரூ.8,990 | 3GB+32GB -ரூ.10,990 & 4GB+64GB – ரூ.12,990 |