சாம்சங் மொபைல் தயாரிப்பாளரின், கேலக்ஸி எம் சீரிஸ் மாடல்களில் சாம்சங் கேலக்ஸி M30 மொபைல் போன் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் கேலக்ஸி எம்30 மொபைல் தொடர்பான விலை மற்றும் விவரக்குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

சீன மொபைல் தயாரிப்பாளர்களின் குறைந்த விலை தயாரிப்புகளுக்கு போட்டியாக மிகவும் கூடுதலான வசதிகளை பெற்றிருக்கும் மொபைல் வரிசை மாடல்களாக இளைய தலைமுறையினர் கவரும் வகையில் வெளியான எம் வரிசையில் வந்த கேலக்ஸி எம்10 மற்றும் கேலக்ஸி எம்20 வரவேற்பினை தொடர்ந்து அடுத்து வரவுள்ள கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி M30 விவரக்குறிப்புகள்

சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்30 விவரக்குறிப்புகளில் குறிப்பிடதக்க அம்சமாக பிரைமரி கேமரா தேர்வில் 13 எம்பி + 5 எம்பி + 5 எம்பி என மொத்தமாக மூன்று கேமராக்களுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றிக்கலாம். இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ள 16 மெகாபிக்சல் கேமரா இடம் பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி வந்தாலும் அடுத்த சில மாதங்களுக்கு ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை வழங்க உள்ள சாம்சங் நிறுவனம், இந்த மொபைலில் 6.38 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி திரையுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் வரவுள்ளது. இந்நிறுவனத்தின் Exynos 7904 சிப்செட் கொண்டிருப்பதுடன் 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு பெற்றிக்கலாம். கூடுதலாக சேமிப்பு திறனை விரிவுப்படுத்த 128 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

மிக விரைவான டர்போ சார்ஜிங் முறையுடன் கூடிய  5000mAh பேட்டரி பெற்றிருக்கலாம். எனவே, சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் விலை ரூ.13,990 அல்லது ரூ.14,990 என விற்பனைக்கு தொடங்கலாம். மார்ச் மாத தொடக்க வாரங்களில் விற்பனைக்கு கிடைக்கலாம்.

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற கேலக்ஸி எம் சீரிஸ் வரிசையின் எம்10 மற்றும் எம்20 ஸ்மார்ட்போன் விலை பட்டியல் அறிவதற்க்கு இணைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M10  2 GB / 16 GB – ரூ.7,990

சாம்சங் கேலக்ஸி M10  3 GB / 32 GB – ரூ.8,990

சாம்சங் கேலக்ஸி M20  3 GB / 32 GB – ரூ.10,990

சாம்சங் கேலக்ஸி M20  4 GB / 64 GB – ரூ.12,990

இரண்டு ஃபிளாஷ் விற்பனை நிறைவுற்றுள்ளதை தொடர்ந்து அடுத்த விற்பனை பிப்ரவரி 12ந் தேதி பகல் 12 மணிக்கு விற்பனைக்கு அமேசான் இந்தியா தளத்தில் கிடைக்க உள்ளது.

தமிழில் ஸ்மார்ட்போன் செய்திகள், விமர்சனம் படிக்க, ஃபேஸ்புக் பக்கத்தில் Gadgets Tamilan தொடர மற்றும் டிவிட்டரில் பின்பற்ற @gadgetstamilan