சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது

ரூபாய் 14,900 விலையில் விற்பனைக்கு சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போனில் மூன்று கேமராக்கள் பின்புறத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

முன்பாக ரூபாய் 7,990 விலையில் கேலக்ஸி எம்10 மற்றும் ரூபாய் 10,990 விலையில் கேலக்ஸி எம்20 என இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு கேலக்ஸி எம் சீரிஸ் ரகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் சிறப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் மிக நேர்த்தியாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக இந்த போனில் 5000mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டு உள்ளது.

6.4 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி யூ திரையுடன் கூடிய சூப்பர் AMOLED டிஸ்பிளேவுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு டிஸ்பிளேவ பாதுகாக்க 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ளது.

Exynos 7904 சிப்செட் கொண்டிருப்பதுடன் 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு பெற்றிக்கலாம். கூடுதலாக சேமிப்பு திறனை விரிவுப்படுத்த அதிகபட்சமாக 512 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

கேமரா பிரிவில் 13 எம்பி + 5 எம்பி + 5 எம்பி என மொத்தமாக மூன்று கேமராக்களுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றிக்கலாம். இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ள 16 மெகாபிக்சல் கேமரா இடம் பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

கருப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் கிடைக்க உள்ள கேலக்ஸி எம்30 போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி M30 விலை பட்டியல்

கேலக்ஸி M30 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு – ரூபாய் 14,990

கேலக்ஸி M30 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு  – ரூபாய் 17,990

மார்ச் 7ந் தேதி பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் சாம்சங் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.