இன்று விற்பனைக்கு வரவுள்ள சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் போனில் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்புடன் மூன்று கேமராவினை பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ளது. கேலக்ஸி எம் 10 மற்றும் கேலக்ஸி எம் 20 இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எம்30

கடந்த சில வாரங்களுக்கு முன் வெளிவந்த கேலக்ஸி எம் சீரிஸ் மாடலின் கேலக்ஸி எம்10 மற்றும் எம்20 மொபைல் போன்களின் மூன்றாவது ஃபிளாஷ் விற்பனை இன்றைக்கு பகல் 12 மணிக்கு தொடங்க உள்ளது. அடுத்ததாக வரவுள்ள கேலக்ஸி எம் 30 பற்றி தொடர்ந்து காணலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்30 6.38 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி திரையுடன் கூடிய AMOLED டிஸ்பிளவுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு டிஸ்பிளேவ பாதுகாக்க 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் வரவுள்ளது. இந்நிறுவனத்தின் Exynos 7904 சிப்செட் கொண்டிருப்பதுடன் 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு பெற்றிக்கலாம். கூடுதலாக சேமிப்பு திறனை விரிவுப்படுத்த 128 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

மிக விரைவான டர்போ சார்ஜிங் முறையுடன் கூடிய  5000mAh பேட்டரி பெற்றிருக்கலாம். கைரேகை சென்சார், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே, இரு சிம் கார்டு ஸ்லாட், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் பெற்றிருக்கும். எனவே, சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் விலை ரூ.14,990 என விற்பனைக்கு தொடங்கலாம்.

இன்று மாலை 6.00 மணிக்கு விற்பனைக்கு கேலக்ஸி எம்30 போன் வெளியிடப்பட உள்ளது.