சாம்சங் கேலக்ஸி M30 அறிமுக தேதி வெளியானது

Samsung Galaxy M30 News in Tamil – இந்தியாவில் முதன்முறையாக வெளியிடப்பட்ட சாம்சங் Galaxy M30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பிப்ரவரி 27ந் தேதி மாலை 6 மணிக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

சாம்சங் Galaxy M30

5000mAh பேட்டரி கொண்ட மொபைலாக சாம்சங் கேலக்ஸி எம்30 மாடலில் 6.38 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி திரையுடன் கூடிய AMOLED டிஸ்பிளவுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு டிஸ்பிளேவ பாதுகாக்க 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் வரவுள்ளது. இந்நிறுவனத்தின் Exynos 7904 சிப்செட் கொண்டிருப்பதுடன் 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு பெற்றிக்கலாம். கூடுதலாக சேமிப்பு திறனை விரிவுப்படுத்த 128 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

கேமரா பிரிவில் முகப்பில் செல்ஃபீ மற்றும் வீடியோ கேமராவை பதிவு செய்ய 16 மெகாபிக்சல் சென்சார் பெற்றிருக்கும். பின்புறத்தில் 16MP+5MP+5MP என மொத்தமாக மூன்று கேமராவுடன் வரவுள்ளது.

கேலக்ஸி எம் சீரிஸ் மாடலின் கேலக்ஸி எம்10 மற்றும் எம்20 மொபைல் போன்களின் விற்பனை தொடர்ந்து ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சியோமி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான போன் தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. இந்நிலையில் இழந்த சந்தையை மீட்க பட்ஜெட் விலையில் பல மாடல்களை விற்பனைக்கு வரவுள்ளது.

சாம்சங் Galaxy M30 மொபைல் போன் விலை ரூ.14,990 க்கு விற்பனைக்கு வரவுள்ளது.