Samsung Galaxy M30

சாம்சங்கின் மிக சிறப்பான புதிய Samsung Galaxy M30 ஸ்மார்ட்போன் மாடல் இன்றைக்கு பகல் 12.00 மணிக்கு அமேசான் மற்றும் சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மூன்று பின்புற கேமராவினை பெற்ற இந்த மொபைல் போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் என இரு மாறுபாட்டில் கிடைக்கின்றது.

6.4 அங்குல முழு ஹெச்டி பிளஸ் கொண்ட Samsung Galaxy M30 போனில் 5000mAh பேட்டரியை பெற்று மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற 15W  சார்ஜர் அம்சத்தை பெற்றதாக கிடைக்கின்றது.

Samsung Galaxy M30 போனின் சிறப்புகள் மற்றும் விலை

பின்புறத்தில் மூன்று கேமராவை கொண்டுள்ள கேலக்ஸி எம்30 போன் மாடல் ரெட்மி நோட் 7 ப்ரோ மாடலுக்கு நேரடியான சவாலினை வழங்கும் மாடலாக விளங்குகின்றது. இந்த போனில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 மெகாபிக்சல் கேமிரா வழங்கப்பட்டுள்ளது.

6.4 அங்குல முழு ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி U திரையுடன் கூடிய சூப்பர் AMOLED டிஸ்பிளேவுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டு டிஸ்பிளேவில் பாதுகாப்பு சார்ந்த 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ளது.

Samsung Galaxy M30

4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு பெற்றிருக்கின்ற இந்த ஸ்மார்ட்போனை இயக்க எக்ஸ்னோஸ் 7904 சிப்செட் உள்ளது. கூடுதலாக சேமிப்பு திறனை விரிவுப்படுத்த அதிகபட்சமாக 512 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்திக் கொள்ள ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா பிரிவில் 13 மெகாபிக்சல் RGB சென்சார், 5 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 5 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் என மொத்தமாக மூன்று கேமராக்களுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ள 16 மெகாபிக்சல் கேமரா இடம் பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

கருப்பு மற்றும் நீலம் என இரு நிறங்களில் கிடைக்க உள்ள கேலக்ஸி எம்30 போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பத்துடன் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Samsung Galaxy M30 Price பட்டியல்

கேலக்ஸி M30 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு – ரூபாய் 14,990

கேலக்ஸி M30 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு  – ரூபாய் 17,990

இரண்டாவது முறையாக இன்றைக்கு நண்பகல் 12.00 மணிக்கு அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.