மூன்று கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எம்30 விவரக்குறிப்புகள்..! : Samsung Galaxy M30

சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் மாடலில் புதிய சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் தொடர்பான முக்கிய விவரங்கள் மற்றும் மூன்று கேமராவுடன் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

பின்புறத்தில் பிரைமரியாக மூன்று கேமராவினை பெற்றிருந்தாலும் பட்ஜெட் விலையில் அமைந்திருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கேலக்ஸி M30 போனில் 5000mAh பேட்டரி இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்30

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற கேலக்ஸி எம்10 மொபைல் போன் விலை ரூ. 7,990 தொடங்குவதுடன் கேலக்ஸி எம்20 மொபைல் போன் ரூ. 10,990 என தொடங்கியுள்ளது. தற்போது அமேசான் இந்தியா வாயிலாக விற்பனைக்கு கிடைத்து வருகின்றது.

மூன்று கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி எம்30 விவரக்குறிப்புகள்..! : Samsung Galaxy M30

இந்நிலையில் அடுத்த மொபைல் போன் மாடலாக கேலக்ஸி எம்30 போனில் 6.38 அங்குல முழு ஹெச்டி பிளஸ் திரையுடன் 1,080 x 2,220 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டதாக வரவுள்ளது. இந்நிறுவனத்தின் சொந்தமான Exynos 7904 சிப்செட் கொண்டிருப்பதுடன் 4ஜிபி ரேம் உடன் 64 ஜிபி உள்ளடக்க மெமரி பெற்றுள்ளது. கூடுதலாக சேமிப்பு திறனை விரிவுப்படுத்த 128 ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

மூன்று பின்புற கேமரா பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற கேலக்ஸி எம்30 போனில் 13 எம்பி + 5 எம்பி + 5 எம்பி என மூன்று கேமராக்களுடன் எல்இடி ஃபிளாஷ் பெற்றுள்ளது. இந்த போனில் செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் மேற்கொள்ள 16 மெகாபிக்சல் கேமரா இடம் பெற்றிருக்கலாம்.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி வந்துள்ள கேலக்ஸி எம்30 போனில் டர்போ சார்ஜிங் அம்சத்துடன்5000mAh பேட்டரி பெற்றிருக்கலாம். எனவே, சாம்சங் கேலக்ஸி எம்30 மொபைல் விலை ரூ.13,990 என விற்பனைக்கு தொடங்கலாம்.