சாம்சங் கேலக்ஸி எம்31

வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி குவாட் கேமரா பெற்ற கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக சாம்சங் அறிவித்துள்ளது. முன்பே அமேசான் இந்தியா தளத்தில் டீசர் வெளியிடப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேலக்ஸி எம்30 வரிசை போலவே 6000 எம்ஏஎச் பேட்டரியையும், முழு எச்டி + இன்ஃபினிட்டி-யு சூப்பர் அமோலேட் திரையையும் 6.4 அங்குல காட்சி டிஸ்பிளேவினை பெற்றிருக்கும். முன்பாக வெளிவந்த வதந்திகளின் படி எக்ஸினோஸ் 9611 சிப்செட் உடன் 6 ஜிபி வரை ரேம், 128 ஜிபி வரை ஸ்டோரேஜ், ஒன் யூஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 கொண்டு இயக்கப்படும்.

எம்31 மொபைலில் 5 எம்பி மேக்ரோ லென்ஸ், 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 5 எம்பி ஆழம் சென்சார் மற்றும் 64 எம்பி பிரைமரி கேமராவுடன் வரவுள்ளது.