galaxy m31 price

சாம்சங் வெளியிட்டுள்ள புத்தம் புதிய கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல் 6,000mAh பேட்டரியுடன் மிக திறன் வாய்ந்த 64 மெகாபிக்சல் கேமரா வசதியை கொண்டதாக 6ஜிபி ரேம் பெற்றதாக வந்துள்ளது.

கேலக்ஸி எம் வரிசையில் வந்துள்ள 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் 15W ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டுள்ள கேலக்ஸி M31 6.4 அங்குல முழு எச்டி + இன்ஃபினிட்டி யு சூப்பர் அமோலேட் திரையை பெற்றுள்ளது. இந்த மொபைலை இயக்குவதற்கு இந்நிறுவனத்தின் எக்ஸினோஸ் 9611 சிப்செட் உடன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ் பெற்றுள்ளது. ஒன் யூஐ 2.0 உடன் ஆண்ட்ராய்டு 10 கொண்டு இயக்கப்படும்.

புதிய கேலக்ஸி எம் 31 மாடலில் பின்புறத்தில் குவாட் கேமரா செட்டப் வழங்கப்பட்டு,  64 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன்  8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றொரு 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் கொண்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 32 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

சாம்ங்கின் கேலக்ஸி எம் 31 மொபைல் போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் பெற்று ரூ .15,999 விலையிலும், 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ .16,999 ஆகவும் தொடங்குகிறது. இந்த மாடலுக்கு அறிமுக சலுகையாக ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.  இந்த மாடல் மார்ச் 5 ஆம் தேதி, மதியம் 12 மணி முதல் ஆன்லைன் சாம்சங் ஸ்டோர் மற்றும் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும்.