Samsung Galaxy M40

சாம்சங்கின் கேலக்ஸி எம் சீரியஸ் வெற்றியின் அடுத்த மாடலாக, கேலக்ஸி M40 விற்பனைக்கு ரூ.19,990 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் கொண்ட இந்த மாடலில் டிரிப்ள் கேமரா செட்டப் வழங்கப்பட்டிருக்கின்றது.

கேலக்ஸி எம்40 போனில் இன்ஃபினிட்டி -O டிஸ்பிளே வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பெற்று 3,500mAh பேட்டரியுடன் அமேசான் இந்தியா ஆன்லைன் மூலம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M40

6.3 அங்குல FHD+ காட்சி திரையை கொண்டு இன்ஃபினிட்டி O அம்சத்துடன் முழு ஹெச்டி பிளஸ் உடன் கூடிய இந்த போனில் 19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் கூடியதாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு கொண்டதாக விளங்கும்.

டிரிப்ள் கேமரா செட்டப் கொண்டதாக விளங்கும் இந்த போனின் கேமரா விபரம் பின்வருமாறு, 32 மெகாபிக்சல் பிரைமரி ஆப்ஷனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றதாக அமைந்திருக்கும். அடுத்தப்படியாக செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் சார்ந்த பிரவுக்கு முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

samsung galaxy m40

கேலக்ஸி எம்40 மொபைல் போனில் 15 வாட்ஸ் விரைவு சார்ஜிங் வசதியுடன் 3,500mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது. வரும் ஜூன் 18 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.