samsung galaxy m40

சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின், அடுத்த அறிமுகமாக கேலக்ஸி M40 ஸ்மார்ட்போன் எம் சீரிஸ் போனில் வெளியிடப்பட்ட உள்ளது. வரும் ஜூன் 11ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

கேலக்ஸி எம் தொடரின் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 போன்ற மொபைல் போன் மாடல்கள் பிரபலமாக விளங்கி வருகின்றது. இந்த வரிசையில் டிரிப்ள் கேமரா ஆப்ஷனுடன், பஞ்ச் ஹோல் டிஸ்பிளே கொண்டதாக எம்40 மொபைல் வெளியாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M40

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட கேலக்ஸி M சீரிஸ் விற்பனை எண்ணிக்கை 20 லட்சத்துக்கு மேலாக கடந்துள்ளது. தற்போது புதிதாக வெளியாக உள்ள கேலக்ஸி M40 போன் குறித்தான முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.

6.3 அங்குல காட்சி திரையை கொண்டு இன்ஃபினிட்டி O அம்சத்துடன் முழு ஹெச்டி பிளஸ் உடன் கூடிய இந்த போனில்  19.5:9 ஆஸ்பெக்ட் விகிதம் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் கூடியதாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் சேமிப்பு கொண்டதாக விளங்கும்.

டிரிப்ள் கேமரா செட்டப் கொண்டதாக விளங்கும் இந்த போனின் கேமரா விபரம் பின்வருமாறு, 32 மெகாபிக்சல் பிரைமரி ஆப்ஷனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் பெற்றதாக அமைந்திருக்கும். அடுத்தப்படியாக செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் சார்ந்த பிரவுக்கு முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்ம்போனில் 5,000mAh பேட்டரி இடம்பெறாது என கருதப்படுகின்றது. இதற்கு மாற்றாக 3,500mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி M40 ஸ்மார்ட்போன் ரூ.20,000 விலைக்குள் அமைந்திருக்கும். ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரியல்மி 3 ப்ரோ போன்ற மாடல்களுக்கு சவாலாக அமைந்திருக்கும்.