சாம்சங் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் அடுத்த கேலக்ஸி மாடலாக Galaxy Unpacked அறிமுக விழாவில் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முந்தைய கேலக்ஸி ஃபோல்டு மாடல் வெற்றியை தொடர்ந்து விற்பனைக்கு வரவுள்ளது.
5ஜி ஆதரவைப் பெற்ற கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் பெற்றதாக 120Hz ரிஃபெரஷ் ரேட் கொண்டதாக விளங்கும். இந்த மாடலில் எஸ்-பென் கூடுதலாக இடம்பெற்றிருக்கும்.
விலை உயர்ந்த சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலில் 4500 mAh பேட்டரி கொண்டதாக 50X டிஜிட்டல் ஜூம் ஆதரவினை பெற்ற 108MP கேமரா ஆதரவுடன் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கேலக்ஸி நோட் 20 வரிசையில் நோட் 20, நோட் 20+ மற்றும் நோட் 20 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்றிருக்கும். எனவே சாம்சங்கின் கேலக்ஸி நோட் 20 விலை ரூ.65,000 முதல் ரூ.80,000 வரை அமைந்திருக்கும். உயர் ரக கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா விலை ரூ.1 லட்சத்திற்குள் அமைந்திருக்கும்.
நோட் 20 சீரிஸ் மட்டுமல்லாமல் கூடுதலாக கேலக்ஸி இசட் ஃபிளிப் 5ஜி மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடல்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.