சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் விற்பனைக்கு வந்தது

சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடலில் சாம்சங் கேலக்ஸி நோட் 20 மற்றும் சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா என இரு மாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர கேலக்ஸி இசட் ஃபோல்டு 2, கேலக்ஸி டேப் S7 மற்றும் கேலக்ஸி டேப் S7+ போன்றவற்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய சந்தையின் விலை விபரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஃபிளிப்கார்ட் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20

$999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங்கின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனில் 6.7 அங்குல முழு எச்டி+ HDR10 + சூப்பர் AMOLED தட்டையான டிஸ்ப்ளே 20:9 விகிதத்துடன் வழங்கப்பட்டு, மிஸ்டிக் வெண்கலம், மிஸ்டிக் பச்சை, மிஸ்டிக் கிரே நிறத்திலும் கூடுதலாக மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் வெள்ளை நிறத்திலும் கிடைக்க உள்ளது.

குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 865 அல்லது எக்ஸினோஸ் 990 சிப்செட் (சந்தைக்கு ஏற்ப) பொருத்தப்பட்டு, 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு அல்லது 256 ஜிபி சேமிப்பு வழங்கப்பட்டு கூடுதலாக 1 டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு சேமிப்பை கொண்டுள்ளது. 4ஜி எல்டிஇ மற்றும் 5ஜி என இரு பிரிவுகளில் கிடைக்கின்றது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பெற்ற கேலக்ஸி நோட் 20 மாடலில் டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பெற்று 12 எம்பி மெயின் சென்சார் உட்பட 12 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 64 எம்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 10 எம்பி சென்சார் கொடுக்கப்பட்டு, 4300mAh பேட்டரியுடன் 25 வாட்ஸ் வேக சார்ஜரை கொண்டுள்ளது. கூடுதலாக எஸ் பென், 5ஜி, இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11ax (2.4 / 5GHz), HE80, MIMO, 1024-QAM, புளூடூத் 5, GLONASS உடன் GPS, யூஎஸ்பி டைப் சி இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 விலை பட்டியல்

Galaxy Note20 4G  8GB + 256GB – $849 (Rs. 83,515 தோராயமாக)

Galaxy Note20 5G  8GB + 128GB – $999.99 (Rs. 74,790 தோராயமாக)

Galaxy Note20 5G  8GB + 256GB – £949 (Rs. 93,350 தோராயமாக)

சாம்சங் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் விற்பனைக்கு வந்தது

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா

உயர் ரக சாம்சங்கின் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6.9 அங்குல Quad HD+ உடன் 3088 × 1440 பிக்சல் தீர்மானத்தை பெற்று டைனமிக் AMOLED Infinity-O டிஸ்ப்ளே வழங்கப்பட்டு மிஸ்டிக் வெண்கலம், மிஸ்டிக் பிளாக் மற்றும் மிஸ்டிக் வெள்ளை நிறத்திலும் கிடைக்க உள்ளது.

5ஜி ஆதரவை பெற்ற குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 865 அல்லது எக்ஸினோஸ் 990 சிப்செட் (சந்தைக்கு ஏற்ப) பொருத்தப்பட்டு, 12 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி சேமிப்பு அல்லது 512 ஜிபி சேமிப்பு வழங்கப்பட்டு கூடுதலாக 1 டிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு சேமிப்பை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பெற்ற கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலில் டிரிப்ள் கேமரா ஆப்ஷனை பெற்று 108 எம்பி மெயின் சென்சார் உட்பட 12 எம்பி அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் மற்றும் 12 எம்பி  பெரிஸ்கோப் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 10 எம்பி சென்சார் கொடுக்கப்பட்டு, 4500mAh பேட்டரியுடன் 45 வாட்ஸ் வேக சார்ஜரை கொண்டுள்ளது

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா விலை பட்டியல்

Galaxy Note20 Ultra 5G  12GB + 256GB –  $1,299.99 (Rs. 97,230 தோராயமாக)

Galaxy Note20 Ultra 5G  12GB + 256GB – € 1,299 (Rs. 1,15,660 தோராயமாக)

Galaxy Note20 Ultra 5G 12GB + 512GB – $1,449.99 (Rs. 1,08,445 தோராயமாக)