ரூ.67,900 விலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 விற்பனைக்கு அறிமுகம்

மிகவும் ஸ்டைலிஷான வடிவ அம்சத்துடன் நவீன வசதிகளுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ரூ.67,900 விலையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 8

இன்று வெளியாக உள்ள ஆப்பிள் ஐபோன் 8, வரவுள்ள கூகுள் பிக்சல் பிரிமியம் ரக மொபைல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் எஸ் பென் வாயிலாக ஜிஃப் படங்கள், மொழி மாற்ற, உருவாக்கலாம். திரை அனைந்திருந்தாலும் அதிகபட்சமாக 100 மெமோ எழுதும் வகையிலான வசதி ஆகியவற்றுடன் ஸ்க்ரீன் ஆஃப் மெமோ போன்றவற்றை பெற்றுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

மிகவும் அகலமான 6.3 இன்ச் QHD இன்ஃபினிட்டி டிஸ்பிளே பெற்றதாக 2960×1440  பிக்சல் தீர்மானத்துடன் சூப்பர் AMOLED வளைந்த கிளாசினை பெற்றதாக கிடைக்கின்ற கேலக்சி நோட் 8 மொபைலில் கருப்பு, நீலம், கிரே மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

பிராசஸர் & ரேம்

மிகவும் சக்திவாய்ந்த Exynos 8895 சிப்செட் பெற்றதாக 6ஜிபி ரேம் கொண்டு இயக்கப்படுகின்ற 64GB உள்ளடங்கிய சேமிப்பு தவிர (128GB மற்றும் 256GB )என மொத்தம் மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது.

கேமரா துறை

புகைப்படம் மற்றும் காணொலிகளை பெற பின்புறத்தில் இரு கேமரா செட்டப் பிரிவுடன் ஒன்று 12 மெகாபிக்சல் f/1.7 பெற்றதாகவும், மற்றொன்று 12 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கேமராவில் f/2.4 போன்றவற்றுடன் இரு கேமராக்களும் 2X ஆப்டிக்கல் ஜூம் மற்றும் 10X டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை பெற்றுள்ளது.

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை பெறுவதற்கு 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 8 மொபைல் கேமரா DSLR தரத்திலான படங்களை பெறவும், குறைந்த வெளிச்சத்திலும், இரவு நேரங்களிலும் சிறப்பான புகைப்படங்களை பெற உதவும் வகையில் Super Night Shot எனும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

மிக வேகமாக சார்ஜிங் ஏறும் வகையான ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் நுட்பத்தினை பெற்றதாக வந்துள்ள கேலக்ஸி நோட் 8 மொபைலில் 3,300mAh பேட்டரி ஆப்ஷனை பெற்றுள்ளது.

மற்றவை

ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1 இயங்குதளத்தை பெற்றதாக வந்துள்ள புளூடூத் v5.0, USB Type-C, NFC, GPS மற்றும் Wi-Fi ஆகியவற்றுடன் பிக்ஸ்பி, தூசு மற்றும் நீர்புகா பாதுகாப்பு தன்மையை பெற்றுள்ளது.

விலை

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 64ஜிபி பெற்ற மாடல் ரூ.67,900 விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது. வருகின்ற செப்டம்பர் 21ந் தேதி முதல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் கிடைக்க உள்ளது.

Recommended For You