சாம்சங் கேலக்ஸி நோட் 9  4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்

சாம்சங் நிறுவனம், பேட்டரி தீ பிடிக்கும் பிரச்சினை காரணமாக கேலக்ஸி நோட் 7 போன்களை திரும்ப பெற்றது. இதை முடிவு கொண்டு வரும் நோக்கில் கேலக்ஸி நோட் 8 அறிமுகம் செய்யப்பட்டது. இருந்த போதும் சர்ச்சை நீடித்து கொண்டே இருந்தது

சாம்சங் கேலக்ஸி நோட் 9  4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்

இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்து பேசிய சாம்சங்நிறுவன சிஇஒ டி.ஜே. கோ தெரிவிக்கையில், சாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது. இந்த மொபைலை பயன்படுத்துபவர்கள் பேட்டரி பிரச்சினை குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.

சாம்சங் கேலக்ஸி நோட் 9  4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்
சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட் போன்கள் 67,900 விலையில், 64சிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்பில்ட் மெம்ரியுடன் வெளிவர உள்ளது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உடன் வரும் ஸ்மார்ட் போன்கள் 84,900 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் 21ம் தேதி வரை இந்த ஸ்மார்ட் போன்களை பிரீபுக்கிங் செய்து பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த போனை கிரெடிட் கார்டு மற்றும் பாஜாஜ் பின்சேர்வ் கார்டுகளை கொண்டு நோ-காஸ்ட் இஎம்ஐ பெறலாம். ஆன்லைன் பிரீபுக்கிங், அமேசான், பிளிக்கார்ட் மற்றும் சாம்சங் மொபைல் ஸ்டோர்களில் நடைபெற்று வருகிறது