Home Tech News Mobiles கலக்கலான சாம்சங் கேலக்ஸி பி சீரிஸ் விபரம் கசிந்தது..! – Samsung Galaxy P-series

கலக்கலான சாம்சங் கேலக்ஸி பி சீரிஸ் விபரம் கசிந்தது..! – Samsung Galaxy P-series

சாம்சங் நிறுவனம், அடுத்ததாக புதிய சாம்சங் கேலக்ஸி பி1 ஸ்மார்ட்போன் மாடலை சாம்சங் கேலக்ஸி பி சீரிஸ் வரிசையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுதவிர கேலக்ஸி ஆர் சீரிஸ் மொபைல்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி பி சீரிஸ்

தற்போது விற்பனைக்கு வந்த கேலக்ஸி எம் சீரிஸ் மொபைலை தொடர்ந்து அதற்கு மேலான விலையில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாருடன் கூடிய அம்சத்தை பெற்ற கேலக்ஸி பி வரிசை வெளியிட உள்ளதாக சில டிவிட்டர்கள் வாயிலாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றது.

மிக சிறப்பான செயல்திறன் வெளிப்படுத்தும் வகையில் விளங்க உள்ள கேலக்ஸி பி1 அல்லது பி10 மாடலில் இந்நிறுவனத்தின் சொந்த Exynos சிப்செட் கொண்டு சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தகூடியதாக அமைந்திருக்கும் மாடலாக விளங்கும்.

நடுத்தர பட்ஜெட்டில் வெளியாகலாம் என கருப்படுகின்ற பி சீரிஸ் போன்களில் டுயல் கேமரா, 3ஜிபி , 4ஜிபி ரேம் மாறுபாடுகள் கொண்டிருக்கலாம். சமீபத்தில் கேலக்ஸி எம்10, எம்20, இந்தியாவில் வெளியானதை தொடர்ந்து , கேலக்ஸி எம்30 விபரங்கள் கசிந்துள்ளது.

அடுத்த சில மாதங்களுக்குள் ரூ.9000 விலையில் தொடங்க வாய்ப்புள்ள கேலக்ஸி ஏ10, ஏ20 மற்றும் ஏ30 மாடல்கள் விபரம் கசிந்தது. தற்போது சாம்சங் கேலக்ஸி பி சீரிஸ் மற்றும் அதனை தொடர்ந்து கேலக்ஸி ஆர் சீரிஸ் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்போது பயன்பாட்டில் உள்ள கேலக்ஸி ஜே சீரிஸ் நீக்கப்பட உள்ளது.

Exit mobile version