4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்

சாம்சங் மொபைல் நிறுவனம், புதிதாக அறிமுகம் செய்துள்ள கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போனில் 5வது தலைமுறை தொலைத்தொடர்பு வசதிகளை புகுத்தி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் போன் முதல்முறையாக 5ஜி சேவையை தொடங்க உள்ள நாடுகளில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரில் அறிமுகம் செய்யப்பட்ட Unpacked 2019 அரங்கில் கேலக்ஸி எஸ்10 வரிசையில் மொத்தம் நான்கு ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன. சாம்சங் கேலக்ஸி எஸ்10, சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்10இ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ஆகியவற்றுடன் மடிக்ககூடிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் உட்பட கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட் ஆகிய அணியக்கூடிய கேட்ஜெட்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி

5ஜி சேவையை முதன்முறையாக தொடங்க உள்ள அமெரிக்கா, லண்டன் மற்றும் கொரியா உட்பட சில ஐரோப்பியா நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ள 5ஜி ஆதரவை பெற்ற கேலக்ஸி எஸ்10 இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் விற்பனைக்கு வரலாம்.

4K முறையில் வீடியோ காலிங், அதிக கிராபிக் அம்சங்களை கொண்ட கேம்களை இலகுவாக விளையாடுவதற்கு வழி வகுக்கும், மேலும் வீடியோ மற்றும் திரைப்படங்களை நிமிடங்களில் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம்.

      4ஜி சேவையை விட 5 மடங்கு வேகமாக இணையத்தை 5ஜி வாயிலாக பெறலாம்.

6.7 அங்குல QHD+ வளைந்த திரையை பெற்றதாக டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி O டிஸ்பிளேவுடன் 3040×1440 பிக்சல்ஸ் கொண்டு 19:9 aspect ratio கொண்டதாக வந்துள்ளது. பாதுகாப்பு சார்ந்த கொரில்லா கார்னிங் கிளாஸ் 6 பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி ஒன் பயனர் இடைமுகத்தை பெற்ற கேலக்ஸி எஸ்10 5ஜி போனில் 7nm ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC (2.8GHz+2.4GHz+1.7GHz) சிப்செட் உடன் குவால்காம் நிறுவனத்தின் X50 5G மோடத்தை கொண்டு செயல்படுகின்றதாக வந்துள்ளது. 8 ஜிபி ரேம் உடன் 256 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டிருக்கின்றது.

கேமரா

கேமரா பிரிவில் நான்கு கேமராவை பின்புறத்தில் கேலக்ஸி S10 5G பெற்றுள்ளது. அதாவது 12 மெகாபிக்சல் f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12 மெகாபிக்சல் f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு, 16 மெகாபிக்சல் f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் மற்றும் நான்காவதாக ToF  சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.

எஸ்10 5ஜி போனில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 10-megapixel சென்சார் உடன் 8-megapixel டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்

கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், உள்ளிட்ட அம்சங்களுடன், ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 4,500mAh  பேட்டரியை பெற்றுள்ளது. பொதுவாக கேலக்ஸி எஸ் 10 பிளஸ் மொபைல் போனில் கூடுதல் ஆதரவாக 5G (Sub-6GHz / mmWave 28GHz, 39GHz), 4G வோல்ட்இ (LTE Cat. 20), Wi-Fi 802.11ax, ப்ளூடுத் v5.0, GPS/ A-GPS, a 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் யூஎஸ்பி Type-C port போன்றவற்றை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி மொபைலின் விலை பட்டியலை விற்பனைக்கு கொண்டு வரும் தேதி மற்றும் விலை விபரங்கள் குறித்த தகவலை சாம்சங் மொபைல் நிறுவனம் வெளியிடவில்லை. 5ஜி சேவை அமெரிக்காவில் இரண்டாவது காலாண்டில் தொடங்கப்படலாம்.