சாம்சங் நிறுவனத்தின், இந்த வருடத்திற்கான ஃபிளாக்‌ஷீப் கில்லர் மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்10 இந்தியாவில் பிப்ரவரி 21ந் தேதி இரவு 12.30 மணிக்கு வெளிவரும் என ஃபிளிப்கார்ட் மூலம் டீசரை சாம்சங் வெளியிட்டுள்ளது.

சான் பிரான்சிஸ்கோ நகரில் பிப்ரவரி 20ந் தேதி காலை 11.30 மணியளவில் பசுஃபிக் நேரப்படி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்திய நேரத்தின்படி, பிப்ரவரி 21ந் தேதி நள்ளிரவு 12.30 மணியாகும். இதே நேரத்தில் இந்தியாவிலும் கேலக்ஸி எஸ்10 வெளியாக உள்ளது. அறிமுக தேதியன்றே முன்பதிவு தொடங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

கேலக்ஸி எஸ்10 மொபைல் போன் வரிசையில், சாம்சங் கேலக்ஸி எஸ்10, சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் அல்லது சாம்சங் கேலக்ஸி எஸ்10இ மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்10+ என மூன்று மாடல்கள் வெளியிடப்படும்.

கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விவரக்குறிப்புகள்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் அல்லது எஸ்10e மொபைலில் 5.8 இன்ச் அகலம் கொண்ட S-AMOLED இன்ஃபீனிட்டி டிஸ்பிளேவினை பெற்ற 4GB RAM + 64GB, 6GB RAM + 64GB மற்றும் 6GB RAM + 128GB என மொத்தமாக மூன்று வகையான வேரியன்டில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் விலை ரூ.59,000 முதல் ரூ.63,000 விலையில் அமைந்திருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைலில் 6.1 இன்ச் அகலம் கொண்ட S-AMOLED இன்ஃபீனிட்டி டிஸ்பிளேவினை பெற்ற 6GB RAM + 128GB மற்றும் 8GB RAM + 256GB என மொத்தமாக இரண்டு வகையான வேரியன்டில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 ரூ.75,000 ( 6GB RAM + 128GB) மற்றும் ரூ.95,000 ( 8GB RAM + 256GB)

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மொபைலில் 6.4 இன்ச் அகலம் கொண்ட S-AMOLED இன்ஃபீனிட்டி டிஸ்பிளேவினை பெற்ற 6GB RAM + 128GB, 8GB RAM + 512GB மற்றும் 12GB RAM + 1TB என மொத்தமாக இரண்டு வகையான வேரியன்டில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ரூ.84,000 ( 6GB RAM + 128GB) மற்றும் ரூ.1,02,000 ( 8GB RAM + 512GB), ரூ.1,24,000 ( 12GB RAM + 1TB) ஆகும்.