சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைல் சீரிஸ் விலை வெளியானது

வருகின்ற பிப்ரவரி 20ந் தேதி வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைல் வரிசை மாடல்களின் விலை வெளியாகியுள்ளது. கேலக்ஸி எஸ்10 லைட், எஸ்10 மற்றும் எஸ்10 பிளஸ் என மூன்று மாடல்களில் வெளியாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10

சாம்சங் நிறுவனம் , மிகவும் சவாலான விலையில் அசத்தலான வசதிகளை பெற்றதாக கேலக்ஸி எஸ்10 வரிசை மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 மொபைல்களில் மொத்தம் மூன்று விதமான வகைகளில் வெளியாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் மொபைலில் 5.8 இன்ச் அகலம் கொண்ட S-AMOLED இன்ஃபீனிட்டி டிஸ்பிளேவினை பெற்ற 4GB RAM + 64GB, 6GB RAM + 64GB மற்றும் 6GB RAM + 128GB என மொத்தமாக மூன்று வகையான வேரியன்டில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் விலை ரூ.59,000 முதல் ரூ.63,000 விலையில் அமைந்திருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 மொபைலில் 6.1 இன்ச் அகலம் கொண்ட S-AMOLED இன்ஃபீனிட்டி டிஸ்பிளேவினை பெற்ற 6GB RAM + 128GB மற்றும் 8GB RAM + 256GB என மொத்தமாக இரண்டு வகையான வேரியன்டில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 ரூ.75,000 ( 6GB RAM + 128GB) மற்றும் ரூ.95,000 ( 8GB RAM + 256GB)

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மொபைலில் 6.4 இன்ச் அகலம் கொண்ட S-AMOLED இன்ஃபீனிட்டி டிஸ்பிளேவினை பெற்ற 6GB RAM + 128GB, 8GB RAM + 512GB மற்றும் 12GB RAM + 1TB என மொத்தமாக இரண்டு வகையான வேரியன்டில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 ரூ.84,000 ( 6GB RAM + 128GB) மற்றும் ரூ.1,02,000 ( 8GB RAM + 512GB), ரூ.1,24,000 ( 12GB RAM + 1TB) ஆகும்.