சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ்

புதிதாக வெளிவந்துள்ள சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போனில் 4 மொபைல்கள் விற்பனைக்கு அறிமுகப்படுதபட்டுள்ளன. இதுதவிர கேலக்ஸி ஃபோல்ட் என மடிக்ககூடிய மொபைலும் காட்சிப்படுத்தபட்டுள்ளது. 5ஜி ஆதரவை பெற்ற கேலக்ஸி எஸ்10 மற்றும் விலை குறைந்த கேலக்ஸி எஸ்10இ போன்றவை வெளியிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்ய தொடங்கி கேலக்ஸி எஸ் சீரிஸ் மொபைல்களில் மிகப்பெரிய வளர்ச்சியை கடந்த 9 ஆண்டுகளில் பெற்றுள்ளது. உலகின் நெ.1 ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் முதன்மையான தரம் மற்றும் வசதியை கொண்டதாக Galaxy S10, Galaxy S10+, Galaxy S10e மற்றும் Galaxy S10 5G  ஸ்மார்ட்போன்கள் வந்துள்ளன.

மேலும் இந்த நிகழ்வில் Samsung Galaxy Fold எனப்படும் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் மாடலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

 Samsung Galaxy S10 விவரக்குறிப்புகள்

புதிதாக அறிமுகமாகியுள்ள கேலக்ஸி எஸ்10 போனில் 6.1 அங்குல QHD+ வளைந்த திரையை பெற்றதாக டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி O டிஸ்பிளேவுடன் 3040×1440 பிக்சல்ஸ் கொண்டு 19:9 aspect ratio கொண்டதாக வந்துள்ளது.

5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் - Samsung Galaxy S10-series

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி ஒன் பயனர் இடைமுகத்தை பெற்ற கேலக்ஸி எஸ்10 போனில் 7nm ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC (2.8GHz+2.4GHz+1.7GHz) சிப்செட் உடன் வந்துள்ளது. இந்தியா உட்பட சில நாடுகளில் Exynos 9820 SoC (2.7GHz+2.3GHz+1.9GHz) பெற்று 8 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டிருக்கின்றது.

கேமரா பிரிவில் மூன்று கேமராவை பின்புறத்தில் கேலக்ஸி S10 பெற்றுள்ளது. அதாவது 12-megapixel f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12-megapixel f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு மற்றும் 16-megapixel f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 10-megapixel சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் - Samsung Galaxy S10-series

கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், உள்ளிட்ட அம்சங்களுடன், ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லேஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 3,400mAh பேட்டரியை பெற்றுள்ளது. பொதுவாக கேலக்ஸி எஸ் 10 போனில் கூடுதல் ஆதரவாக  4G VoLTE (LTE Cat. 20), Wi-Fi 802.11ax, ப்ளூடுத் v5.0, GPS/ A-GPS, a 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் யூஎஸ்பி Type-C port போன்றவற்றை பெற்றுள்ளது.

 Samsung Galaxy S10+ விவரக்குறிப்புகள்

பொதுவாக கேலக்ஸி S10 மற்றும் S10+ மாடல்களில் பொதுவான திரை அமைப்பு மற்றும் கேமரா பெற்றிருந்தாலும், முன்புற கேமரா மற்றும் சேமிப்பு வசதிகளில் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றுள்ளது.

Samsung Galaxy S10+

பிரிமியம் ரக கேலக்ஸி எஸ்10 சீரீஸ் மாடலாக அமைந்துள்ள கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.4 அங்குல QHD+ வளைந்த திரையை பெற்றதாக டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி O டிஸ்பிளேவுடன் 3040×1440 பிக்சல்ஸ் கொண்டு 19:9 aspect ratio கொண்டதாக வந்துள்ளது. பாதுகாப்பு சார்ந்த கொரில்லா கார்னிங் கிளாஸ் 6 பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி ஒன் பயனர் இடைமுகத்தை பெற்ற கேலக்ஸி எஸ்10 போனில் 7nm ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC (2.8GHz+2.4GHz+1.7GHz) சிப்செட் உடன் வந்துள்ளது. இந்தியா உட்பட சில நாடுகளில் Exynos 9820 SoC (2.7GHz+2.3GHz+1.9GHz) பெற்று 12 ஜிபி ரேம் உடன் 1 TB சேமிப்பு வசதி,  8 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு வசதி என மொத்தமாக மூன்று வகை மெமரியை கொண்டிருக்கின்றது. குறிப்பாக 12 ஜிபி ரேம் பெற்ற மாடல் செராமிகு மற்றும் கருப்பு நிறத்தில் மட்டம்ம் கிடைக்கும்.

கேமரா பிரிவில் மூன்று கேமராவை பின்புறத்தில் கேலக்ஸி S10 பெற்றுள்ளது. அதாவது 12-megapixel f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12-megapixel f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு மற்றும் 16-megapixel f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.

எஸ்10 பிளஸ் போனில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 10-megapixel சென்சார் உடன் 8-megapixel டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் - Samsung Galaxy S10-series 5ஜி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் அறிமுகம் - Samsung Galaxy S10-series

கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், உள்ளிட்ட அம்சங்களுடன், ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லேஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 4,100mAh  பேட்டரியை பெற்றுள்ளது. பொதுவாக கேலக்ஸி எஸ் 10 பிளஸ் மொபைல் போனில் கூடுதல் ஆதரவாக  4G VoLTE (LTE Cat. 20), Wi-Fi 802.11ax, ப்ளூடுத் v5.0, GPS/ A-GPS, a 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் யூஎஸ்பி Type-C port போன்றவற்றை பெற்றுள்ளது.

 Samsung Galaxy S10e விவரக்குறிப்புகள்

விலை குறைந்த கேலக்ஸி எஸ்10 சீரீஸ் மாடலாக வந்துள்ள கேலக்ஸி எஸ்10இ போனில் 5.8 அங்குல HD+AMOLED வளைந்த திரையை பெற்றதாக டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி O டிஸ்பிளேவுடன் 2280×1080 பிக்சல்ஸ் கொண்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10இ

ஆண்ட்ராய்டு பை 9.0 இயங்குதளத்தை பின்பற்றி ஒன் UI பெற்ற கேலக்ஸி எஸ்10இ போனில் 7nm ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC (2.8GHz+2.4GHz+1.7GHz) சிப்செட் உடன் வந்துள்ளது. இந்தியா உட்பட சில நாடுகளில் Exynos 9820 SoC (2.7GHz+2.3GHz+1.9GHz) பெற்று 8 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டிருக்கின்றது.

கேமரா பிரிவில் இரண்டு கேமராவை பின்புறத்தில் கேலக்ஸி S10 பெற்றுள்ளது. 12-megapixel f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு மற்றும் 16-megapixel f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.

செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான 10-megapixel சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார், உள்ளிட்ட அம்சங்களுடன், ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லேஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 3,100mAh  பேட்டரியை பெற்றுள்ளது. பொதுவாக கேலக்ஸி எஸ் 10 போனில் கூடுதல் ஆதரவாக  4G VoLTE (LTE Cat. 20), Wi-Fi 802.11ax, ப்ளூடுத் v5.0, GPS/ A-GPS, a 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் யூஎஸ்பி Type-C port போன்றவற்றை பெற்றுள்ளது.

 Samsung Galaxy S10 5G விவரக்குறிப்புகள்

5ஜி சோதனை செய்யப்படுகின்ற மற்றும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ள தென்கொரியா, லண்டன், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பா நாடுகளில் வெளியிடப்பட உள்ள கேலக்ஸி எஸ்10 5ஜி மொபைல் போன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் வரிசையின் மிக முக்கியமான மாடலாகும்.

கேலக்ஸி எஸ்10 5ஜி

கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் உள்ள வசதியை கேலக்ஸி எஸ்10 5ஜி பெற்றுள்ளது. இந்த போனில் 6.7 அங்குல QHD+ வளைந்த திரையை பெற்றதாக டைனமிக் AMOLED இன்ஃபினிட்டி O டிஸ்பிளேவுடன் 3040×1440 பிக்சல்ஸ் கொண்டு 19:9 aspect ratio கொண்டதாக வந்துள்ளது. பாதுகாப்பு சார்ந்த கொரில்லா கார்னிங் கிளாஸ் 6 பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி ஒன் பயனர் இடைமுகத்தை பெற்ற கேலக்ஸி எஸ்10 போனில் 7nm ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 SoC (2.8GHz+2.4GHz+1.7GHz) சிப்செட் உடன் வந்துள்ளது. 8 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டிருக்கின்றது.

கேமரா பிரிவில் நான்கு கேமராவை பின்புறத்தில் கேலக்ஸி S10 5G பெற்றுள்ளது. அதாவது 12-megapixel f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12-megapixel f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு, 16-megapixel f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் மற்றும் நான்காவதாக ToF  சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.

எஸ்10 பிளஸ் போனில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பிரத்தியேகமான டூயல் கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 10-megapixel சென்சார் உடன் 8-megapixel டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், உள்ளிட்ட அம்சங்களுடன், ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லேஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 4,500mAh  பேட்டரியை பெற்றுள்ளது. பொதுவாக கேலக்ஸி எஸ் 10 பிளஸ் மொபைல் போனில் கூடுதல் ஆதரவாக 5G (Sub-6GHz / mmWave 28GHz, 39GHz), 4G VoLTE (LTE Cat. 20), Wi-Fi 802.11ax, ப்ளூடுத் v5.0, GPS/ A-GPS, a 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் யூஎஸ்பி Type-C port போன்றவற்றை பெற்றுள்ளது.

 சாம்சங் எஸ்10 சீரிஸ் விலை பட்டியல்

கீழே வழங்கப்பட்டுள்ள விலை பட்டியல் அமெரிக்கா விலை அடிப்படையாக கொண்டு தோராயமாக தொகுக்கபட்ட ஆரம்ப விலை ஆகும். இந்திய விலை இன்றைக்கு வெளியாக்கூடும். ஆனால் 5ஜி ஆதரவை பெற்ற மாடல் விலை அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்திய சந்தையில் காலை 10 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தின் மூலம் ப்ரீ ஆர்டர் துவங்குகிறது.

கேலக்ஸி எஸ்10 விலை $899.99 (ரூ. 63,900)

கேலக்ஸி எஸ்10+ விலை  $999.99 (ரூ. 71,000)

கேலக்ஸி எஸ்10இ விலை  $749.99 (ரூ. 53,300)

சாம்சங் எஸ்10 சீரிஸ்

பொதுவாக கேலக்ஸி எஸ்10 சீரிஸ் போன்களில் பிளேமிங்கோ பிங்க், கேனரி மஞ்சள், ப்ரிசம் பசுமை மற்றும் ப்ரிஷ் ப்ளூ, ப்ரீஸ் பிளாக், பிரிசம் வெட் நிறங்கள் கிடைக்கின்றது. குறிப்பாக நாடுகள் வாரியாக நிறங்கள் மாறுபடும்.