சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்சிப் ஸ்மார்ட்போன் மாடலான 2017 சாம்சங் கேலக்ஸி S8 மற்றும் சாம்சங் கேலக்ஸி S8+ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ. 57,900 க்கு சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8+ விற்பனைக்கு வந்தது

சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8+

  • சாம்சங் கேலக்ஸி S8 விலை ரூபாய் 57,900
  • சாம்சங் கேலக்ஸி S8+ விலை ரூபாய் 64,900
  • ஃபிளிப்கார்ட், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ரீடெயில் மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
  • சாம்சங் பே மற்றும் ஜியோ இரட்டை சலுகை வசதிகளை பெற்றுள்ளது.

ரூ. 57,900 க்கு சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8+ விற்பனைக்கு வந்தது

ஆண்ட்ராய்டு நௌகட் 7.0 இங்குதளத்தில் செயல்படுகின்ற இரு மொபைல்களிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன்  கேலக்சி S8 ஸ்மார்ட்போனில் 5.8 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED , கேலக்சி  S8 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 அங்குல க்வாட் HD+ சூப்பர் AMOLED திரையுடன் இரு மொபைல்களும் 1440×2960 பிக்சல் தீர்மானத்துடன் 531 ppi அடர்த்தியை பெற்று விளங்குகின்றது.

இரு மாடல்களிலும் சாம்சங்  Exynos 8895 பிராசஸருடன் உடன் இணைந்து செயல்படுகின்ற 4GB ரேம் பெற்று 64GB வரையிலான இன்ட்ரன்ல் மெமரி வசதியுடன் 256 GB வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக அதிகரிக்கலாம்.

ரூ. 57,900 க்கு சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8+ விற்பனைக்கு வந்தது

இரு ஸ்மார்ட்போன்களில் அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்ட் மற்றும் ஆப்பிள் ஸ்ரீ போன்ற ஆப்ஸ்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும் அவற்றை விட சிறப்புமிக்க அதி நவீன செயற்கை நுன்னறிவு கொண்ட பிக்ஸ்பை (Bixby) மிக சிறப்பான வாய்ஸ் அசிஸ்ட் வசதியாக விளங்கும் என சாம்சங் தெரிவிக்கின்றது.

12 மெகாபிக்சல் டூயல் பிக்சல் ரியர் கேமரா வசதியுடன் , முன்புறத்தில் செல்ஃபீ படங்களுக்கு ஏற்ற 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை கொண்டுள்ளது. இரு மாடல்களிலும் உயர்தர 4K வீடியோ பதிவு செய்யும் திறன் பெற்று விளங்குகின்றது. பேட்டரி திறனில் கேலக்ஸி S8 மொபைலில் 3000mAh திறன் மற்றும் சாம்சங் கேலக்ஸி S8+ மொபைலில் 3500mAh திறன் பெற்று விளங்குகின்றது.

ரூ. 57,900 க்கு சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8+ விற்பனைக்கு வந்தது

சாம்சங் பிரத்யேக இயர்போன்களை AKG by Harman பிராண்டில் ரூ. 6500 மதிப்பில் தனியாக பண்டிலுடன் வழங்குகின்றது. மேலும் கூடுதல் விருப்பங்களாக  யூஎஸ்பி டைப் சி , மிக வேகமாக சார்ஜ் ஏறும் வகையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றுடன் நீர் புகா IP68 சான்று , 4G LTE (Cat. 16), வை-ஃபை 802.11ac (2.4GHz, 5GHz), ப்ளூடுத் v5.0, NFC மற்றும் GPS போன்றவை உள்ளது.

173 கிராம் எடை கொண்ட மொபைல்களில்  பிளாக், கிரே, ப்ளூ, சில்வர், மற்றும் கோல்டு போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.

இன்று முதல் பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஆன்லைன் தளங்களில் முன்பதிவு தொடங்கப்படுகின்ற கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி  எஸ்8 பிளஸ் மாடல்கள் விற்பனைக்கு மே 5 முதல் கிடைக்க உள்ளது. மொபைல் ரீடெயிலர்கள் வாயிலாகவும் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரூ. 57,900 க்கு சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8+ விற்பனைக்கு வந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here