சாம்சங் கேலக்ஸி S9 & கேலக்ஸி S9 பிளஸ் மொபைல் அறிமுகம் – MWC 2018

பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (2018 Mobile World Congress) அரங்கில் சாம்சங் கேலக்ஸி S9, சாம்சங் கேலக்ஸி S9 பிளஸ் என இரு ஃபிளாக் ஷீப் கில்லர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி S9 & கேலக்ஸி S9 பிளஸ்

சாம்சங் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கேலக்ஸி வரிசையில் முந்தைய கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8+ ஆகிய இரு மாடல்களை விட கூடுதலான வசதிகள் மற்றும் சிறப்புகளை பெற்ற புதிய ரக மாடல்கள் வெளியாகியுள்ளது.

முந்தைய எஸ்8 மாடலுக்கு இணையான தோற்ற அமைப்பினை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்9 கருவி 5.8 அங்குல QHD+ இன்ஃபினிட்டி திரையை பெற்றதாக வந்துள்ள  எஸ்9 பிளஸ் 6.2 அங்குல QHD+  கருவி என கருவியில் 10nm 64-bit ஆக்டோ கோர் SoC (2.7GHz குவாட் மற்றும் 1.7GHz குவாட் மேலும் சில சந்தைகளில் , 2.8GHz Quad மற்றும் 1.7GHz) 4ஜிபி ரேம் (S9) மற்றும் 6ஜிபி ரேம் (S9+) ஆப்ஷன்களில் உள்ளீட்டு சேமிப்பில் 64/ 128/ 256GB  ஆகியவற்றுடன் அதிகபட்சமாக 400 GB வரை மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி எஸ்9 போனில் 3000mAh திறன் பெற்ற பேட்டரியுடன் ,  சூப்பர் ஸ்பீடு இரட்டை கேமரா 12 மெகாபிக்சல் சென்சாருடன்  f/1.5-f/2.4 சென்சார் உடன் OIS ஆகியவற்றை பெற்றிருக்கின்ற நிலையில் முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை பெற 8 மெகாபிக்சல் சென்சாரை பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்பற்றி எஸ்9 பிளஸ் போனில் 3500mAh திறன் பெற்ற பேட்டரியுடன் ,  சூப்பர் ஸ்பீடு இரட்டை கேமரா 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட  f/1.5-f/2.4 சென்சார் உடன் OIS ஆகியவற்றை பெற்றிருக்கின்ற நிலையில் முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை பெற 8 மெகாபிக்சல் சென்சாரை பெற்றுள்ளது.

ஆப்பிள் மொபைலில் இடம்பெற்றுள்ள அனிமோஜி போன்று அல்லாமல் AR Emoji என்ற அம்சத்தை பெற்றதாக வந்துள்ளது. இது முகபாவனைகளுக்கு ஏற்றதாக வந்துள்ளது. இதில் Bixby Vision, AKG-tuned டூயல் ஸ்பிக்கர் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி எஸ்9  $719.99 (Rs. 46,600) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் $839.99 ( Rs. 54,400) ஆகும்.

Recommended For You