சாம்சங் கேலக்ஸி எஸ்9 & எஸ்9+ அறிமுக தேதி விபரம்வருகின்ற பிப்ரவரி மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெற உள்ள சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 திருவிழாவில்,இந்த வருடத்திற்கான ஃபிளாக்‌ஷீப் கில்லர் மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 & எஸ்9+

சாம்சங் கேலக்ஸி எஸ்9 & எஸ்9+ அறிமுக தேதி விபரம்

விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ் 8 மாடலை விட மிக வேகமாகவும், துல்லியமாகவும் இயங்கும் வகையிலான சூப்பர் ஸ்பீடு கேமராவை கொண்டதாக விற்பனைக்கு புதிய எஸ்9 வரிசை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

5.8 அங்குல QHD+ சூப்பர் AMOLED திரையை கொண்ட இந்த மொபைல் போனில் ஸ்னாப்டிராகன் 845 பிராசெஸர் சிப்செட் கொண்டு இயக்கப்படுவதுடன், இந்நிறுவனத்தின் சொந்த சிப்செட்களான Exynos 9810 கொண்ட மாடல்களும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. 4ஜிபி ரேம் தவிர அதிகபட்சமாக 6ஜிபிரேம் கொண்ட மாடலுடன் 64ஜிபி , 128ஜிபி மற்றும் அதிகபட்சமாக சிறப்பு மாடலில் 512 ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

பின்புறத்தில் மிக வேகமாக இயங்கம் திறன் பெற்ற இரட்டை கேமரா பிரிவுடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா பெற்றிருக்கும், முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள உயர் ரக 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கலாம்.

வருகின்ற பிப்ரவரி 25ந் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்9 & எஸ்9+ அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் விற்பனை மற்றும் விலை குறித்தான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here