8 அங்குல சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுவியட்நாம் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) 5000mAh பேட்டரியுடன் 4ஜி எல்டிஇ ஆதரவுடன் $285 (Rs 18, 200) விலையில் கிடைக்கின்றது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017)

2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி டேப் ஏ 8.0 மாடலின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலில் 8 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்ட கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

மிகவும் அகலமான 8.0 இன்ச் திரை பெற்றுள்ள டேப் ஏ டெப்ளெட்டில் கோல்டு மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கின்ற இக்கருவி 8.0 அங்குல WXGA 1280 x 800 பிக்சல் தீர்மானத்துடன் கிடைக்கின்றது.

பிராசஸர் & ரேம்

இந்த டெப்ளெட்டில் 1.4 ஹிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425  சிப்செட் கொண்டு 2ஜிபி நினைவகம் கொண்டு 16 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்பு திறன் பெற்று நீட்டிக்கும் வகையில் 256ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

8 அங்குல சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கேமரா துறை

டேப் ஏ 8.0 (2017) மாடலில் பின்புறத்தில் 1080p வீடியோ பதிவு செய்யும் திறனுடன் கூடிய எல்இடி ஃபிளாஷ் f/1.9, ஆட்டோ ஃபோகஸ் பெற்ற 8 மெகாபிக்சல் சென்சார் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் செல்பி படங்கள் மற்றும் வீடியோ அழைப்பை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் இடம்பெற்றுள்ளது.

8 அங்குல சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பெற்ற இந்த டேப்பில் 5000mAh பேட்டரி திறனை பெற்றிருக்கின்றது.

மற்றவை

ஒற்றை நானோ சிம் ஆதரவுடன் 4G LTE, வை-ஃபை a/b/g/n, புளூடூத் 4.2, 3.5mm ஆடியோ ஜாக், ஜிபிஎஸ் + GLONASS / Beidou ஆகியவற்றை கொண்டதாக கிடைக்கின்றது.

8 அங்குல சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

விலை

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 (2017) விலை $285 (Rs 18, 200)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here