Samsung Galaxy Tab S7

ரூ.55,999 ஆரம்ப விலையில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் S7 மற்றும் கேலக்ஸி டேப் S7+ மாடல் ரூ.79,999 எனவும் துவங்குகின்றது. தற்போது ப்ரீ புக்கிங் துவங்கப்பட்டுள்ள இந்த டேப்ளெட்டிற்கு பிரத்தியேக சலுகையாக ரூ.16,000 வரை சலுகைகள் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 மாடல் 11 அங்குல LTPS TFT WQXGA எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டேப் எஸ் 7 + மாடல் 12.4 இன்ச் WQXGA+ Super AMOLED டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் பெறுகிறது. இரண்டு டேப்லெட்களும் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் மூலம் இயக்கப்பட்டு எஸ் பென் ஆதரவுடன் வருகின்றன. டேப்லெட்டுகள் மல்டி-ஆக்டிவ் வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட டெக்ஸ் பயன்முறையையும் ஆதரிக்கின்றன. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7-ல் 8,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, டேப் எஸ் 7 + இல் 10,090 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் S7, டேப் S7+ விலை பட்டியல்

Samsung Galaxy Tab S7 Wi-Fi 128GB — ரூ. 55,999

Samsung Galaxy Tab S7 4G 128GB — ரூ. 63,999

Samsung Galaxy Tab S7+ 4G 128GB — ரூ. 79,999

இதுதவிர, கீ போர்ட் கவர் டேப் எஸ்7 மற்றும் டேப் எஸ்7 + முறையே ரு.15,999 மற்றும் ரூ.17,999 ஆகும். விற்பனை அறிமுக சலுகையாக ரூ.10,000 வரை கீபோர்ட் கவருக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.