சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி எஸ்10 அறிமுகத்தின் போது சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், சாம்சங் கேலக்ஸி பட்ஸ் , சாம்சங் கேலக்ஸி ஃபிட் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஃபிட் இ அணியக்கூடிய போன்ற கேட்ஜெட்ஸ் கருவிகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் வரிசையில் உள்ள கேலக்ஸி எஸ்10 , கேலக்ஸி எஸ்10 பிளஸ், கேலக்ஸி எஸ்10இ மற்றும் கேலக்ஸி எஸ்10 5ஜி மொபைல்களை தொடர்ந்து கேலக்ஸி ஃபோல்ட் என்கிற மடிக்ககூடிய மொபைல் போன் வெளியிடப்பட்டுள்ளது.

சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்

சாம்சங் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ்

ஸ்மார்ட்வாட்ச் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் பல்வேறு வசதிகளுடன் 1.1 அங்குல AMOLED டிஸ்பிளைவுடன் கொரில்லா கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பினை பெற்றுள்ளது.

வாட்ச் ஏக்டிவ் மாடலில் Exynos 9110 SoC கொண்டு இயக்கப்பட்டு Tizen ஓஎஸ் மூலம் செயல்பட்டு 786 எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் பெற்றுள்ளது. இரு நாட்களுக்கு தாக்குபிடிக்கின்ற 230mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்10 மொபைல் மூலம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. ப்ளூடுத் 4.2 Wi-Fi b/g/n, NFC, மற்றும் A-GPS  ஆதரவுகளுடன் வந்துள்ளது.

சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்

சாம்சங் கேலக்ஸி பட்ஸ்

சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்

வயர்லெஸ் கேலக்ஸி பட்ஸ் மிக சிறப்பான அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த வயர் இல்லாத பட்ஸில் உயர்தரமான முறையில் ஆடியோவினை பெற வழி வகுக்க  AKG அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம், இதனை Enhanced Ambient Sound என குறிப்பிடகின்றது. இந்த பட்ஸ்கள் சிறப்பான முறையில் சுற்றுச்சூழல் ஒலிகளை கேட்கவும் உதவுகிறது. தொடுதிரை சென்சார் உதவியுடன் இயக்கும் வகையிலான இந்த பட்ஸ்களில் ப்ளூடூத் 5.0 ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்ஸ் மாடலும் 58mAh பேட்டரி கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த பட்ஸ் உதவியுடன் 6 மணி நேரம் பாடல்கள் மற்றும் 5 மணி நேரம் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

மேலும் இந்த பட்ஸூடன் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள 252mAh சார்ஜிங் கேஸ் மூலம் கூடுதலாக 7 மணி நேரம் இசை வசதி மற்றும் 6 மணி நேரம் கால் வசதியை பெறலாம். வருகின்ற மார்ச் 8ந் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்

சாம்சங் கேலக்ஸி ஃபிட்

அணியக்கூடிய சாதனங்களில் விற்க்கப்படுகின்ற கேலக்ஸி ஃபிட் மற்றும் ஃபிட் இ கருவிகள் 90 விதமான நடவடிக்கைகளை கண்காணிக்க உதவுகின்றது. கேலக்ஸி ஃபிட் கருவி 0.95 இன்ச் கலர் திரையுடன் 120x240pixel தீர்மானத்தை கொண்டுள்ளது. கேலக்ஸி ஃபிட் e கருவி 0.74 இன்ச் கருப்பு மற்றும் வெள்ளை திரையுடன் 64×128 pixel தீர்மானத்தை கொண்டுள்ளது.

5ATM வாட்டர் ரெசிஸ்டென்ட் பாதுகாப்புடன் வந்துள்ள இந்த கருவிகளில் கேலக்ஸி ஃபிட் கருப்பு மற்றும் வெள்ளி நிறங்களிலும், ஃபிட் இ கருவி கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.

சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்