galaxy z flip

சாம்சங் நிறுவனத்தின் இரண்டாவது மடிக்கும் முறையிலான ஸ்மார்ட்போன் மாடலாக Galaxy Z Flip விலை $1,380 (ரூ.98,600) என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விநோயோகிக்கப்பட்ட உள்ளது. மடித்த நிலையில் அறிவிப்புகளை பெற சிறிய திரை மற்றும் முழுமையான 6.7 அங்குல திரையும் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது.

முன்பாக கடந்த வருடம் வெளியிடப்பட்ட கேலக்ஸி ஃபோல்டு மாடலில் இடம்பெற்றிருந்த ஹின்ச் கொண்டு புதிய கேலக்ஸி இசட் ஃபிளிப் மாடலும் வடிவமைக்கப்பட்டு அல்ட்ரா தின் கிளாஸ் டிஸ்பிளே கொண்டதாக விளங்குகின்றது. 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் 2,636 x 1,080 தீர்மானத்தை கொண்டு நடுவினில் மடிக்கும் முறையை கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவிற்கு மையமாக கொண்டு பஞ்ச்-ஹோல் கட் அவுட்டைக் கொண்டுள்ளது. 1.06 இன்ச் பெற்ற இரண்டாம் நிலை சிறிய திரையின் மூலம் அறிவிப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சின்ன டிஸ்பிளேவினை தொடர்ந்து இரட்டை கேமரா அமைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கேமரா பிரிவினை பொறுத்தவரை, இந்த மாடலில் பிரைமரியாக 12 மெகாபிக்சல் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 10 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவிற்கு மையமாக கொண்டு பஞ்ச்-ஹோல் கட் அவுட்டை பெற்றுள்ளது.

சாம்சங் Galaxy Z Flip மடிக்கு முறையிலான ஸ்மார்ட்போன் வெளியானது

8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 855+ SoC மூலம் இயக்கப்படும்.  3,300 எம்ஏஎச் திறன் பெற்ற பேட்டரியுடன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வந்துள்ளது.