சாம்சங் Galaxy Z Flip

நாளை விற்பனைக்கு வெளியாக உள்ள மடிக்கும் முறையிலான தொடுதிரை பெற்ற சாம்சங் Galaxy Flip Z ஸ்மார்ட்போனின் டீசரை ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் மாடல் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் நடுவினில் மடிக்கும் முறையை கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவிற்கு மையமாக சீரமைக்கப்பட்ட பஞ்ச்-ஹோல் கட் அவுட்டைக் கொண்டுள்ளது. கேலக்ஸி இசட் ஃபிளிப் 1.06 அங்குல இரண்டாம் நிலை சிறிய திரையின் மூலம் அறிவிப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சின்ன டிஸ்பிளேவினை தொடர்ந்து இரட்டை கேமரா அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சாரும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 855+ SoC மூலம் இயக்கப்படும்.  3,300 எம்ஏஎச் திறன் பெற்ற பேட்டரியுடன் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 9W வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றை வழங்க இரண்டு பேட்டரிகளை இந்த மொபைல்  கொண்டிருக்க உள்ளது.