சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்

முதன்முறையாக சாம்சங் மொபைல் நிறுவனம் மடிக்கூடிய கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி Fold மொபைல் விலை ரூ. 1,41,300 ஆக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

ஸ்மார்ட்போன் தலைமுறையின் அடுத்த வளர்ச்சியாக கருதப்படுகின்ற மடிக்ககூடிய திரையை பெற்ற மொபைல்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்ய மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2019 அரங்கினை தேர்வு செய்துள்ள நிலையில் சாம்சங் மொபைல் நிறுவனம் கேலக்ஸி எஸ்10 அறிமுகத்தின் போது கேலக்ஸி ஃபோல்ட் வரிசையை வெளியிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி FOLD சிறப்புகள் என்னென்ன ?

கேலக்ஸி ஃபோல்ட் என்ற பெயருடன் வெளியிடப்பட்டுள்ள மடிக்ககூடிய இந்த ஸ்மார்ட்போன் மாடலில் 7.3 அங்குல Infinity Flex டிஸ்பிளே மற்றும் இரண்டாம் கட்ட டிஸ்பிளே 4.7 அங்குலத்தை கொண்டுள்ளது. இந்த மொபைல் போனில் மொத்தம் 6 கேமராக்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போனில் மிக முக்கிய அம்சமாக நேரடியாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பெறாமல் கஸ்டமைஸ் செய்யப்பட்ட இயங்குதளத்தை கொண்டிருக்கும் என கருதப்படுகின்றது.

Samsung Galaxy Fold Specs

கேலக்ஸி வரிசைகளில் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனுக்கான மாடலில் மொத்தம் இரண்டு திரை அமைப்பை பெற்றுள்ளது. முழுமையான காட்சி திரை அமைப்பு அதிகபட்சமாக 7.3 அங்குல QXGA+ இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டைனமிக் AMOLED 1536×2152 பிக்சல்ஸ் டிஸ்பிளேவாக விரிவடைகிறது. அதனை தொடர்து மொபைலை மடக்கிய நிலையில் பயன்படுத்த 4.7 அங்குல சூப்பர் AMOLED கொண்டு 840×1960 பிக்சல்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்

பெயர் குறிப்பிடபடாத 7nm சிப்செட் என குறிப்பிடப்பட்டுள்ள இந்த மொபைலில் 12 ஜிபி ரேம் உடன் 512 ஜிபி சேமிப்பை கொண்டு கூடுதலாக விரிவாக்க எஸ்டி கார்டு வழங்கப்படவில்லை. இந்த மொபைல் போனில் மொத்தமாக 6 கேமரா சென்சார்கள் இணைக்கபட்டுள்ளது.

பின்புறத்தில் மூன்று கேமராக்களை பெற்றுள்ளது. அதாவது அதாவது 12-megapixel f/2.4 கொண்ட டெலிபோட்டோ லென்ஸ், 12-megapixel f/1.5 டுயல் அப்ரேச்சர் கொண்ட OIS ஆதரவு மற்றும் 16-megapixel f/2.2 அல்ட்ரா வைட் கேமரா சென்சார் பெற்றதாக அமைந்துள்ளது.

முழுமையான 7.3 அங்குல திரை சமயத்தில் 10MP செல்ஃபி F2.2 மற்றும் வீடியோ காலிங் கேமரா உடன் கொண்டதாக அமைந்துள்ளது. மடித்த நிலையில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு 10MP செல்ஃபி F2.2 மற்றும் 8 MP RGB கேமரா சென்சார் பெற்றதாக உள்ளது.

கேலக்ஸி ஃபோல்ட் போனில் இரண்டு பேட்டரிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற ஆதரவுடன் 4,380mAh பேட்டரியை கொண்டதாக அமைந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்

ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட கஸ்டமைஸ் ஓஎஸ் வடிவமைப்பில் கூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு குழு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக App Continuity அமைந்திருக்கும். இதற்காக பிரத்தியேகமான வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் மைக்கோரசாஃப்ட் ஆபிஸ் போன்றவற்றை கொண்டிருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் விலை $1980 (ரூ. 1,41,300) ஆகும். இந்த போனில் பச்சை, நீலம், சில்வர் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ளது. 4ஜி எல்டிஇ மற்றும் 5ஜி ஆதரவை கொண்டதாக விளங்கும். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஏப்ரல் 26ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் இந்தியாவில் கேலக்ஸி ஃபோல்ட் அறிமுகம் செய்யப்படுவது குறித்து எந்த தகவலும் இல்லை.

https://www.youtube.com/watch?v=7r_UgNcJtzQ