இந்தியாவில் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங்கின் ஃபிளாக் ஷீப் கில்லர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் (Samsung Galaxy S10 Series) மாடலின் விலை மற்றும் ஆஃபர் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அறிந்து கொள்ளலாம். கேலக்ஸி எஸ்10+, கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10இ ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முன்பே மூன்று மாடல்களின் நுட்ப விபரங்கள் மற்றும் வசதிகளை நாம் முன்பே வெளியிட்டிருந்தோம். தற்போது இந்திய விலை மற்றும் ஆஃபர்களை தொடர்ந்து காணலாம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் விலை பட்டியல்
சாம்சங் கேலக்ஸி எஸ்10இ 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூபாய் 55,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.66,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலின் 8 ஜிபி ரேம் + 512 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூபாய் 84,990 விலையில் கிடைக்கும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.73,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 8 ஜிபி + 512 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.91,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 12 ஜிபி + 1 TB சேமிப்பு வசதி கொண்டு ரூ.1,17,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக சலுகையாக கேலக்ஸி எஸ்10 வரிசை மொபைல்களை முன் பதிவு செய்பவர்களுக்கு கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ் ரூ.9,990 விலையிலும், வயர்லெஸ் கேலக்ஸி பட்ஸ் விலை ரூ. 2,990 என கிடைக்கும். இதுதவிர மொபைல் அப்கிரடு செய்பவர்களுக்கு ரூ.15,000 போனஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி கார்டு பயன்படுத்தினால் ரூ.6000 வரை கேஸ்பேக் சலுகை பெறலாம்.
சாம்சங் கேல்க்ஸி வாட்ச் ஏக்டிவ் விலை ரூ.29,990
சாம்சங் கேலக்ஸி பட்ஸ் விலை ரூ.9,990 ஆகும்.