இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி J7 மேக்ஸ் ரூ.17,900 விலையிலும் மற்றும் J7 ப்ரோ ரூ. 20,900 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சாம்சங் கேலக்ஸி J7 ப்ரோ மற்றும் J7 மேக்ஸ் விற்பனைக்கு வெளியானது..!

சாம்சங் கேலக்ஸி J7 ப்ரோ மற்றும் J7 மேக்ஸ்

இரு ஸ்மார்ட்போன்களும் கோல்டு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ளதை தொடர்ந்து ஜூன் 20 முதல் சாம்சங் கேலக்ஸி J7 மேக்ஸ் மாடலும் ஜூலை மாதம் முதல் சாம்சங் கேலக்ஸி J7 ப்ரோ ஸ்மார்ட்போனும் கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு ஸ்மார்ட்போன்களிலும் லைட்வெயிட் சாம்சங் பே மினி ஆப் வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி J7 ப்ரோ மற்றும் J7 மேக்ஸ் விற்பனைக்கு வெளியானது..!

சாம்சங் கேலக்ஸி J7 ப்ரோ

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ மாடலில் 5.5 அங்குல முழு HD திரையுடன் 1080×1920 பிக்சல் தீர்மானம் பெற்று ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில்  1.6 GHz ஆக்டோ-கோர்  Exynos சிப்செட் பெற்று 3ஜிபி ரேம் உடன் இணைந்த 64 ஜிபி உள்ளடங்கிய மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக சேமிப்பை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா பிரிவில் 1080p வீடியோ பதிவு செய்யும் திறன்கொண்ட 13மெகபிக்சல் கேமரா வழங்கப்பட்டு f/1.7 அப்ரேசர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபீ பிரயர்கள் மற்றும் வீடியோ காலிங் வசதிக்காக f/1.9 அப்ரேச்சர் பெற்ற எல்இடி ஃபிளாஷ் பெற்ற 13 மெகபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை சிம் ஆதரவுடன் ,4ஜி வோல்ட்இ, வை-ஃபை , புளூடுத் போன்றவற்றுடன் 3,600mAh பேட்டரி கொண்டு ஜே7 ப்ரோ இயக்கப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி J7 ப்ரோ மற்றும் J7 மேக்ஸ் விற்பனைக்கு வெளியானது..!

சாம்சங் கேலக்ஸி J7 மேக்ஸ்

சாம்சங் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் மாடலில் 5.7 அங்குல முழு HD திரையுடன் 1080×1920 பிக்சல் தீர்மானம் பெற்று ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில்  1.6 GHz ஆக்டோ-கோர் மீடியாடெக் சிப்செட் பெற்று 4ஜிபி ரேம் உடன் இணைந்த 32ஜிபி உள்ளடங்கிய மெமரி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக சேமிப்பை நீட்டிக்க மைக்ரோ எஸ்டி கார்டு ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா பிரிவில் ஜே7 ப்ரோ ஆப்ஷனை பெற்ற 1080p வீடியோ பதிவு செய்யும் திறன்கொண்ட 13மெகபிக்சல் கேமரா வழங்கப்பட்டு f/1.7 அப்ரேசர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் செல்ஃபீ பிரயர்கள் மற்றும் வீடியோ காலிங் வசதிக்காக f/1.9 அப்ரேச்சர் பெற்ற எல்இடி ஃபிளாஷ் பெற்ற 13 மெகபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி J7 ப்ரோ மற்றும் J7 மேக்ஸ் விற்பனைக்கு வெளியானது..!

இரட்டை சிம் ஆதரவுடன் ,4ஜி வோல்ட்இ, வை-ஃபை , புளூடுத் போன்றவற்றுடன் 3,300mAh பேட்டரி கொண்டு ஜே7 ப்ரோ இயக்கப்படுகின்றது.

விலை மற்றும் சிறப்பு சலுகை விபரம்

வரும் ஜூன் 20 முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள கேலக்ஸி ஜே7 மேக்ஸ் மற்றும் ஜூலை மத்தியில் கிடைக்க உள்ள கேலக்ஸி ஜே7 ப்ரோ என இரண்டும் 120ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகின்றது. மேலும் சாம்சங் பே மினி வாயிலாக பண பரிவர்த்தனை செய்தால் ரூபாய் 800 வரை கேஸ்பேக் கிடைக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here