சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரியுடன் அறிமுகம்7000mAh பேட்டரி மற்றும் குவாட் கேமரா செட்டப் என பல்வேறு வசதிகளுடன் சாம்சங் கேலக்ஸி M51 முதன்முறையாக ஜெர்மனி நாட்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களுக்குப் பிறகு விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ஜெர்மனியில் வெளியிடப்பட்டுள்ள எம்51 மாடல் விலை ஐரோப்பா மதிப்பில் யூரோ 360 (தோராயாமாக ரூ.31,500) ஆகும். எனவே, இந்தியாவில் வெளியிடப்படும் விலை ரூ.30,000 ஆக துவங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி M51 சிறப்புகள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M51 மாடலில் 6.7 இன்ச் முழு எச்டி+ சூப்பர் அமோலேட்+ இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளே பெற்றதாக அமைந்து பஞ்ச் ஹோல் டிசைனை கொண்டுள்ளது. ஆக்டா கோர் சிப்செட் கொண்டு குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 SoC மூலம் இயக்கப்படலாம் (ஆனால் சிப்செட் விபரத்தை வெளியிடவில்லை) என எதிர்பார்க்கப்படுகின்றது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை பின்பற்றிய OneUI மூலம் இயங்குகிறது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 512 ஜிபி வரை நீட்டிக்கலாம்.

கேலக்ஸி M51 மாடலில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பும், f/1.8 துளை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் அல்ட்ரா வைட் ஏங்கிள் 123 டிகிரி வரை, 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை உள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32 மெகாபிக்சல் உள்ளது. 25W விரைவு சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி பெற்றுள்ளது.