ரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியானது

இந்தியாவில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களின் விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 மொபைல் போனிற்கு ப்ரீ புக்கிங் இன்று முதல் துவங்கியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்10, கேலக்ஸி எஸ்10+ மற்றும் கேலக்ஸி எஸ்10இ மொபைல்கள் விற்பனக்கு வந்துள்ளது.

முன்பதிவு மார்ச் 5ந் தேதி வரை சாம்சங் பிளிப்கார்ட், அமேசான் இந்தியா, பேடிஎம் மால் மற்றும் டாடா க்ளிக் தளங்களிலும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது. மார்ச் 8ந் தேதி கேலக்ஸி எஸ்10 மாடல் விற்பனை துவங்கப்பட உள்ளது.

ரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியானது

சாம்சங் கேலக்ஸி எஸ்10 விலை பட்டியல்

பிப்ரவரி 20ந் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்10 போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் கேலக்ஸி S10 5ஜி ஆதரவு கொண்ட மொபைலை தவிர மற்ற மூன்று மொபைல்களும், கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், பட்ஸ் போன்றவற்றின் விலை விபரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10இ 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி – ரூ. 55,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பிரைசம் வெள்ளை மற்றும் பிரைசம் கருப்பு என இரு நிறங்களில் கிடைக்க உள்ளது.

ரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியானது

சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடல் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.66,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பிரைசம் நீலம், பிரைசம் வெள்ளை மற்றும் பிரைசம் கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 மாடலின் 8 ஜிபி + 512 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ. 84,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு பிரைசம் வெள்ளை நிறத்தில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியானது

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.73,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் பிரைசம் நீலம், பிரைசம் வெள்ளை மற்றும் பிரைசம் கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்க உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 8 ஜிபி + 512 ஜிபி சேமிப்பு வசதி கொண்டு ரூ.91,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் செராமிக் கருப்பு மற்றும் செராமிக் வெள்ளை வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் 12 ஜிபி + 1 TB சேமிப்பு வசதி கொண்டு ரூ.1,17,900 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் செராமிக் கருப்பு மற்றும் செராமிக் வெள்ளை வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

ரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியானது

அறிமுக சலுகையாக கேலக்ஸி எஸ்10 வரிசை மொபைல்களை முன் பதிவு செய்பவர்களுக்கு கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ் ரூ.9,990 விலையிலும், வயர்லெஸ் கேலக்ஸி பட்ஸ் விலை ரூ. 2,990 என கிடைக்கும். இதுதவிர மொபைல் அப்கிரடு செய்பவர்களுக்கு ரூ.15,000 போனஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி கார்டு பயன்படுத்தினால் ரூ.6000 வரை கேஸ்பேக் சலுகை பெறலாம்.

சாம்சங் கேல்க்ஸி வாட்ச் ஏக்டிவ் விலை ரூ.29,990

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் விலை ரூ.9,990 ஆகும்.

ரூ.1.17 லட்சத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் வெளியானது

மேலும் படிங்க – சாம்சங் கேலக்ஸி எஸ்10 வரிசை மொபைல் நுட்ப விபரங்கள் மற்றும் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ் மற்றும் பட்ஸ்

 மடிக்ககூடிய சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு பற்றி அறிவோம்.