1 மில்லியன் டாலர் ஃபோல்டபிள் ஃபோன்களை தயாரிக்கிறது சாம்சங்,  யோனஹப் தகவல்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், அடுத்த ஆண்டின் இரண்டாம் பகுதியில் 1 மில்லியன் ஃபோல்டபிள் ஃபோன்களை தயாரிக்க உள்ளது என்று யோனஹப் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவை அடிப்படையாக கொண்ட சாம்சங் நிறுவனம், ஃபோல்டபிள் ஃபோன்களை தயாரிப்பது குறித்து சான்பிரான்சிஸ்கோவில் நடந்த விழாவில் தகவல் வெளியிட்டது. இருந்த போதும் இந்த போன்களின் விலை, எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

இதுகுறித்து பேசிய சாம்சங் மொபைல் கம்யூனிகேஷன் பிசினஸ் தலைவர் கோ பேசுகையில், விரைவில் ஃபோல்டபிள் ஃபோன்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

1 மில்லியன் டாலர் ஃபோல்டபிள் ஃபோன்களை தயாரிக்கிறது சாம்சங்,  யோனஹப் தகவல்

புதிய வெர்சன் ஃபோல்டபிள் ஃபோன்கள் சாம்சாங் நிறுவனம் ஆண்டுதோறும் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்வது போன்றே அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி இந்த ஃபோல்டபிள் ஃபோன்கள் தயாரிப்பு எண்ணிகையை அதிகரிக்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் மொத்தமாக 300 மில்லியன் ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்துள்ளது என்று மார்க்கெட் ஆராய்ச்சி நிறுவனமான டிரென்ட்போர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஃபோல்டபிள் ஃபோன்களை தயாரிப்பதன் மூலம், 5G வசதி கொண்ட ஆப்பிள் நிறுவன போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

1 மில்லியன் டாலர் ஃபோல்டபிள் ஃபோன்களை தயாரிக்கிறது சாம்சங்,  யோனஹப் தகவல்

உலகின் மிகபெரிய நிறுவனமான கூகிள் நிறுவனம், இந்த ஃபோல்டபிள் ஃபோன்களுக்கான சாப்ட்வேர்களை உருவாக்கியுள்ளது. இதற்காக தானும் கூகிள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சையுடன் ஒரு மாதத்திற்கு முன்பே சந்த்தித்து பேசியதாக சாம்சங் மொபைல் கம்யூனிகேஷன் பிசினஸ் தலைவர் கோ தெரிவித்துள்ளார்.

சாம்சங் மற்றும் மற்ற போன் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களை அப்கிரேட் செய்ய முயற்சிகள் செய்து வருகின்றன. சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு தங்கள் நிறுவனத்தின் கேலக்சி S10 போன்களை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு வெளியாகும் சாம்சங் போன்களில் 5G வசதி இடம் பெற வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.