4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி A9 ஸ்மார்ட் போனில் முதல் முறையாக குவாட்ரோபுல் பிரைமரி (ரியர்) கேமரா சிஸ்டம் உடன் வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் வரும் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் போது அறிவிக்கப்படும் என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் இடம் பெற்றுள்ள முக்கிய விஷயம் என்வென்றால், இதில் நான்கு கேமராக்கள் உள்ளன. 8MP அல்ட்ரா-வைடு சென்சார், 24MP மெயின் சென்சார், 5 MP ஆழம் கொண்ட சென்சார் மற்றும் 10 MP டெல்போட்டோ சென்சார்கள் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 24MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9

இந்த ஸ்மார்ட்போன் குறித்து பேசிய சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, டி.ஜே. கோக், ஐ.டி, தற்போது நாங்கள் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தை எங்களது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தி வருகிறோம். உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து தனது புதிய தயாரிப்பை உருவாக்கியுள்ளது என்றார்.

சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட் போனில் பொருத்தப்பட்டுள்ள பின்புற கேமராக்களில் பிங்கர் பிரிண்ட் சென்சார், முகத்தை அறிந்து கொள்ளும் சப்போர்ட் மற்றும் 3800mAh பேட்டரிகளுடன் குயிக் சார்ஜ் 2.0 தொழில்நுட்பமும் இடம் பெற்றுள்ளது.

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி A9 ஸ்மார்ட்போன்கள் 6.3 இன்ச் முழு HD+ sAMOLED டிஸ்பிளேகளுடன் விற்பனை வர உள்ளது. இந்த டிஸ்பிளே 19:9 அங்குலத்தில் இருக்கும்.

4-பின்புற கேமராக்களுடன் அடுத்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி A9

இந்த புதிய ஸ்மார்ட்போன் ஹெட்செட்கள், கோல்காம் ஸ்நாப்டிராகன் 660 பிரசாசர்களுடன் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன், இந்த ஸ்டோரேஜ்-ஐ விரிவுபடுத்தி கொள்ளும் வகையிலும் உள்ளது. இது மட்டுமின்றி 6GB மற்றும் 8GB ரேம் என இரண்டு வகையில் வெளிவர உள்ளது.
மேலும் இதில் டிஜிட்டல் அசிஸ்ட் Bixby, சாம்சங் பே மற்றும் சாம்சங் ஹெல்த் வசதிகள் உள்ளது.

இந்த டிவைஸ்கள் காவியர் பிளாக், லெமனேடு ப்ளூ மற்றும் பபுள்காம் பின் கலர்களிலும், பின்புறம் வளைந்த 3D கிளாஸ்களுடனும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் குறிபிட்ட சில வியாபாரிகளிடம் மட்டும் அடுத்த மாதம் முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.