சாம்சங் நிறுவனத்தின் டைஸென் 3.0 இயங்குதளத்தை பெற்ற சாம்சங் Z4 ஸ்மார்ட்போன் ரூபாய் 5790 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போனாக  Z4 விளங்குகின்றது.

ரூ.5790 விலையில் சாம்சங் Z4 ஸ்மார்ட்போன் வெளியானது..!

சாம்சங் Z4 ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மாற்றாக சாம்சங் நிறுவனத்துக்கு சொந்தமான இயங்குதளமான டிஸென் 3.0 அடிப்படையாக கொண்டு செயல்படுகின்ற இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட சில நாடுகளில் விற்பனை செய்யப்படுவதில் இந்தியாவும் ஒன்றாகும்.

இசட்4 மொபைலில் 4.5 அங்குல WVGA (480×800 pixels) டிஸ்பிளே பெற்று 2.5D வளைந்த கிளாஸ் பெற்ற இதில் 1.5GHz குவாட் கோர் பிராசஸர் வாயிலாக இயக்கப்பட 1GB ரேம் வழங்கப்பட்டு 8GB வரையிலான உள்ளடங்கிய சேமிப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 128GB வரையில் சேமிப்புதிறனை நீட்டிக்க மைக்ரோஎஸ்டி அட்டையை பயன்படுத்தலாம்.

டிஸென் இயங்குதளத்தில் முதல் இசட் சீரீஸ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இசட்4 கருவியில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா இரட்டை  எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் கிடைக்க உள்ளது. முன்புறத்தில் f/2.2, எல்இடி ஃபிளாஷ்  போன்றவற்றின் ஆதரவுடன் கூடிய 5 மெகாபிக்சல் செல்ஃபீ மற்றும் வீடியோ கால்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கேமரா பிரிவில் சமூக வலைதளங்களுக்கு என பிர்த்தியேக அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது.

ரூ.5790 விலையில் சாம்சங் Z4 ஸ்மார்ட்போன் வெளியானது..!

சாம்சங் Z4 ஸ்மார்டோனில் 2050mAh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டு கூடுதலான வசதிகளாக 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 4.0, USB 2.0, GPS, மற்றும் குளோனஸ் போன்ற வசதிகளும் இடம்பெற்றுள்ளது.

ஃபீச்சர் மொபைலில் இருந்து ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு முதல் தேர்வாக விளங்கும் வகையிலான மாடல் என சாம்சங் இசட்4 மொபைல் சாம்சங் குறிப்பிடுகின்றது. கருப்பு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்க உள்ள இசட்4 ஆஃப்லைன் கடைகளில் மே 19 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here