சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் வருகை விபரம் - Samsung Galaxy M40

சாம்சங் நிறுவனத்தின், கேலக்ஸி எம் சீரிஸ் மாடலில் அடுத்து சாம்சங் கேலக்ஸி எம்40 (Samsung Galaxy M40) ஒய்-ஃபை தரச்சான்றிதழ் வழங்கும் தளத்தின் மூலம் விபரம் கசிந்துள்ளது. முன்பாக கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20, கேலக்ஸி எம்30 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஜே சீரிஸ் வரிசை நீக்க உள்ள நிலையில், தற்போது விற்பனைக்கு கிடைக்கின்ற புதிய கேலக்ஸி ஏ வரிசையில் கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30, கேலக்ஸி ஏ40, கேலக்ஸி ஏ50 மாடல்களுடன் சமீபத்தில் கேலக்ஸி ஏ70 மற்றும் கேலக்ஸி ஏ80 மாடல்கள் அறிமுகம் செய்யபட்டன.

சாம்சங் கேலக்ஸி M40 ஸ்மார்ட்போன்

தற்போது வெளியாகியுள்ள விபரங்களின் “SM-M405F/DS” அடிப்படையில் கேலக்ஸி எம்40 போனின் நுட்ப விபரங்கள் பெரிதாக வெளியாகவில்லை. ஆண்டராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட சாம்சங் ஒன் யூஐ மூலம் செயல்படும் என்ற தகவல் மட்டும் உறுதியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போன் வருகை விபரம் - Samsung Galaxy M40

எம்30 டிரிப்ள் கேமரா ஆப்ஷனுடன் வந்த மாடலை தொடர்ந்து அடுத்து வெளியாக உள்ள கேலக்ஸி எம்40 பற்றி எந்த தொழில்நுட்ப விபரங்கள் வெளியாகவில்லை. அடுத்த சில நாட்களில் மேலதிக விபரங்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

image source -wi-fi.org