இந்தியாவில் விற்பனையில் உள்ள ஸ்மார்ட்போன்களில் 6ஜிபி ரேம் பெற்று விளங்கும் அற்புதமான மற்றும் சிறந்த பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தகூடிய மாடல்களை இங்கே காணலாம்.

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

6 ஜிபி ரேம் மொபைல்கள்

6 ஜி.பி  மற்றும் அதற்கு கூடுதலான 8 ஜி.பி என இரண்டிலும் இந்த வருடத்தில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் வெளியடப்பட்டுள்ளன. குறிப்பாக கேலக்ஸி எஸ்8 பிளஸ், ஒன்பிளஸ் 5, ஹானர் 8 ப்ரோ, ஹெச்டிசி யூ11, சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ மற்றும் ஆசுஸ் ஜென்ஃபோன் ஏஆர் போன்றவை மிக முக்கியமானதாகும்.

 

1. சாம்சங் கேலக்ஸி எஸ் 8 பிளஸ்

இந்தியாவில் கேலக்ஸி எஸ்8 பிளஸ் 4ஜிபி மற்றும் 6ஜிபி என இரண்டிலும் கிடைக்கின்றது. மிக சிறப்பான செயல்திறன் மிக்க Exynos 8895 பிராசஸருடன் உடன் இணைந்து செயல்படுகின்ற 6GB ரேம் பெற்று 128GB வரையிலான சேமிப்பு வசதியுடன், 12 மெகாபிக்சல் டூயல் பிக்சல் ரியர் கேமரா வசதியுடன் , முன்புறத்தில் செல்ஃபீ படங்களுக்கு ஏற்ற 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை கொண்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கேலக்ஸி எஸ் 8 பிளஸ் விலை ரூ. 70,900 ஆகும்.

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

2. ஒன்பிளஸ் 5

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன் பிளஸ் 5 குறைந்தபட்சமாக 6ஜிபி மற்றும் 8ஜிபி என இரண்டு தேர்வுகளில் பவர்ஃபுல்லான குவால்காம் 835 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்றது. 6 ஜி.பி ரேம் கொண்ட மாடல் 64 ஜி.பி உள்ளடங்கிய சேமிப்புடன், 128 ஜி.பி உள்ளடங்கிய சேமிப்பு பெற்ற மாடல்  8 ஜி.பி ரேம் பெற்றுள்ளது. இரட்டை கேமரா செட்டப் பெற்றதாக வந்துள்ளது.

ஒன் பிளஸ் 5 6ஜிபி மாடல் விலை ரூ. 32,999 மற்றும் 8ஜிபி மாடல் விலை ரூ.37,999 மட்டுமே..

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

3. ஹானர் 8 ப்ரோ

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மிக குறைந்த விலை 6 ஜி.பி ரேம் மாடல்களில் ஒன்றான ஹூவாய் ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 5.7 அங்குல திரையுடன் 128 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்று மிக சிறப்பான படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்யும் வகையிலான கேமரா ஆப்ஷனுடன் கூடிய மாடலாக உள்ளது.

ஹூவாய் ஹானர் 8 ப்ரோ 6ஜிபி மாடல் விலை ரூ. 29,999/-

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

4. ஆசுஸ் ஜென்ஃபோன் AR

சர்வதேச அளவில் 6ஜிபி மற்றும் 8 ஜிபி கொண்ட மாடலாகவும், முதல் டாங்கோ மற்றும் ஏஆர் போன்ற வசதிகளை பெற்ற ஆசுஸ் ஜென்ஃபோன் AR இந்தியாவில் 8 ஜிபி ரேம் பெற்ற மாடலாக குவால்காம் 821 சிப்செட் பெற்று ட்ரைகேம் 23 மெகாபிக்சல் கேமரா பெற்ற இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கின்றது.

ஆசுஸ் ஜென்ஃபோன் ஏஆர் 8ஜிபி மாடல் விலை ரூ. 49,999/-

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

5. ஹெச்டிசி U11

பிரசத்தி பெற்ற ஹெச்டிசி நிறுவனத்தின் U11 மிக சிறப்பான செயல்திறன் மிக்க மாடலாக விளங்கும் இந்த மொபைலில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பிராசஸருன் கூடிய 6ஜிபி ரேம் 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை கொண்டதாக விளங்குகின்றது.

ஹெச்டிசி U11 6ஜிபி மாடல் விலை ரூ. 49,999/-

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

6. சாம்சங் கேலக்சி C9 ப்ரோ

இந்தியாவில் கிடைக்கின்ற பேப்ளெட்களில் பிரசத்தி பெற்ற சாம்சங் கேலக்சி C9 ப்ரோ 6 அங்குல திரையுடன் ஸ்னாப்டிராகன் 653 ஆக்டோ கோர் பிராசஸருடன் 6ஜிபி ரேம் பெற்று 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் கிடைக்கின்றது. இருபுறத்திலும் 13 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்சி C9 ப்ரோ 6ஜிபி மாடல் விலை ரூ. 31,900/-

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

7.ஆசுஸ் ஜென்ஃபோன் 3 டீலக்ஸ்

ஆசுஸ் நிறுவனத்தின் மற்றொரு மாடலான ஆசுஸ் ஜென்ஃபோன் 3 டீலக்ஸ் மொபைல்  5.7 அங்குல திரையுடன் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸருடன் 6ஜிபி ரேம் பெற்று 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் கிடைக்கின்றது.

ஆசுஸ் ஜென்ஃபோன் 3 டீலக்ஸ் 6ஜிபி மாடல் விலை ரூ. 49,999/-

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

8. ஒன் பிளஸ் 3டி

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடந்த வருட மாடலான ஒன்பிளஸ் 3டி 6ஜிபி ரேம் பெற்று 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸருடன் இருபுறத்திலும் 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது. விற்பனையில் உள்ள மாடல்களிலே குறைந்த 6ஜிபி ரேம்  கொண்ட 3டி இந்த வருடத்தின் இறுதி வரை மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

ஒன்பிளஸ் 3டி 6ஜிபி மாடல் விலை ரூ. 27,999/-

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

9. நுபியா Z11

நுபியா பிராண்டின் மாடலான நுபியா Z11 மொபைல் 5.5 அங்குல திரையுடன் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸருடன் 6ஜிபி ரேம் பெற்று 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன் கிடைக்கின்றது.

நுபியா Z11 மொபைல் 6ஜிபி மாடல் விலை ரூ. 29,999/-

6 ஜிபி ரேம் பெற்ற அற்புதமான ஸ்மார்ட்போன்கள் - 2017

[td_smart_list_end]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here