கிரிக்கெட் கடவுள் சச்சின் டென்டுல்கர் பெயரில் முதல் மாடலாக ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.போன் ரூபாய் 12,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

சச்சின் ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.போன் விலை ரூ.12,999

ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.போன்

  • ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தில் செயல்படுகின்ற  ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.போன் இருவிதமான மெமரி ஆப்ஷனை பெற்றுள்ளது.
  • 4ஜிபி ரேம ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
  • ஃபிளிப்கார்ட் தளத்தில் எக்ஸ்குளூசிவாக விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவின் கிரிக்கெட் மேதை சச்சின் டென்டுல்கர் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ்ஆர்டி.போன் ஸ்மார்ட்போனில் 5.5 அங்குல முழு ஹெச்டி டிஸ்பிளே பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டோ-கோர் பிராசஸர் பெற்று 4ஜிபி ரேம் ஆப்ஷனை பெற்று  32ஜிபி மற்றும் 64ஜிபிஎன இருவிதமான மெமரி தேர்வுகளில் கிடைக்கின்றது.

கேமரா பிரிவில் பிரைமரி கேமரா13 மெகாபிக்சல் பிடிஏஃப், எல்இடி ஃபிளாஷ் ஆப்ஷனை பெற்றுள்ளது. வீடியோ ரெகார்டிங் பிரிவில் 4கே தரத்தில் பதிவு செய்ய உதவுகின்றது. முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ கால்களுக்கு 5 மெகாபிக்சல் கேமரா இடம் பெற்றுள்ளது.

சச்சின் ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.போன் விலை ரூ.12,999

3,000mAh பேட்டரி மற்றும் க்யூக் சார்ஜ் 2.0 நுட்பத்தை பெற்று விளங்குகின்றது. முதற்கட்டமாக டைட்டானியம் கிரே வண்ணத்தில் கிடைக்க உள்ள இந்த மொபைலில் 4G எல்டிஇ, வோல்டிஇ, வை-பை, புளூடூத், யூஎஸ்பி, என்எஃப்சி மற்றும் ஜிபிஎஸ் போன்றவை பெற்றுள்ளது.

ஸ்மார்ட்ரான் எஸ்ஆர்டி.போன் விலை

  • srt.phone 32 GB -12,999
  • srt.phone 64 GB -13,999

மேலும் விபரங்கள் வரும் இணைந்திருங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here