அறிமுகமானது தேவையற்ற சத்தத்தை குறைக்கும் புதிய சோனி WH-1000XM3

ஆடியோ துறையில் தங்களது பங்கை உறுதிபடுத்தி கொள்ளும் நோக்கில் சோனி இந்தியா நிறுவனம் புதிய WH-1000XM3 இயர்போனை வெளியிட்டுள்ளது. இந்த இயர்போனின் விலை 29,900 ரூபாயாகும்.

புதிய WH-1000XM3 இயர்போகளில் புதிதாக மேம்படுத்தப்பட்ட HD நாய்ஸ் கேன்சல் செய்யும் பிராசசர் QN1 பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், இந்த இயர்போன்கள், இதற்கு முந்தைய பிராசசர்களுடன் ஒப்பிடும் போது நான்கு மடங்கு செயல்திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த புதிய பிராசாசர்கள், தேவையான சத்தத்தை தெளிவாக கேட்க செய்வதுடன், தேவையற்ற பேக்கிரவுண்ட் சத்தங்களான மனிதர்கள் பேசு கொள்ளும் நாய்ஸ்களை கேன்சல் செய்து விடும். இதற்காக இரண்டு நாய்ஸ் சென்சார் தொழில்நுட்பம், குறிப்பிட்ட நாய்ஸ்களை டுயல் ஹெட்போனில் தெளிவாக் கேட்க உதவும்.

அறிமுகமானது தேவையற்ற சத்தத்தை குறைக்கும் புதிய சோனி WH-1000XM3

WH-1000XM3 இயர்போன்களில், இடம் பெற்றுள்ள 40mm டிரைவர் யூனிட்கள், லிக்யுட் கிறிஸ்டல் பாலிமர் டியாப்ரகம் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், உயர்தரம் கொண்ட ஆடியோவை வெளியிடும். இந்த இயர்போன்கள் ஹெவி பீட்களை இசைப்பதுடன், அவற்றை முழுமையாக 40kHz ஆக அளவு வரை மாற்றி விடும். இது இயர்போன் பயன்படுத்துபவர்களுக்கு இனிமையான அனுபவத்தை அளிக்கும்.

இந்த இயர்போனில் உள்ள நாய்ஸ் கேன்சல் செய்யும் பிராசசர் QN1, தேவையற்ற சத்தங்களை ரத்து செய்வது மட்டுமின்றி, உயர்தரம் கொண்ட சத்தங்களை, 32 பிட் ஆடியோ சிக்னல்களாக மாற்றி, DAC ஆம்பிளிபயர் உடன் இணைந்து செயல்பட உதவும். மேலும் இது உயர்தரம் கொண்ட சவுண்ட்கலை, சிறந்த சிக்னல்களுடன் நாய்ஸ் விகிதத்தை, இயர்போன்கள் இணைக்கப்பட்ட டிவைஸ்களுக்கு ஏற்ற வகையில் குறைந்த அளவாக மாற்றி விடும்.

இந்த இயர்போனில் பயனாளர்கள் எளிதாக வலது கையை பயனபடுத்தி மியூசிக் சத்தத்தை குறைக்கவோ, கூட்டவோ முடியும். இதுமட்டுமின்றி வலதுபுற டச்பேடு மூலமும் வால்யூமை உயர்த்தவோ, குறைக்கவோ அல்லது பாடல்களில் டிராக்கை மாற்றவோ முடியும்.

அறிமுகமானது தேவையற்ற சத்தத்தை குறைக்கும் புதிய சோனி WH-1000XM3

மேலும் இந்த இயர்போனில் ஆட்டோமேட்டிக்காக பவர் ஆன்/ஆப் வசதியும் உள்ளது. இதுமட்டுமின்றி ஆப் மூலம் இந்த இயர்போன் இணைக்கப்பட்டால், அதன் மூலம் தேவையற்ற சத்தங்கள் குறைக்கப்படும். இதன் மூலம் எந்தவித இடையூறும் இல்லாமல் நீங்கள் விரும்பும் மியூசிக்கை கேட்கலாம்.

WH-1000XM3 இயர்போன்கள், சிலிம் ஆகவும், குறைந்த எடை அதாவது 255g எடையுடன் இருக்கும். இது பேப்பரிக் பாக்ஸில் பிளாக் அல்லது பிளாட்டினம் சில்வர்களுடன் கோல்ட் ஹைலைட்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

மேலும் இந்த இயர்போன்களில் உள்ள பேட்டரி 30 மணி நேரமாக இருக்கும். மேலும் இதில் நாய்ஸ் கேன்சல் செய்யும் வசதி, ப்ளூடூத் உடன் இணைக்கும் வசதி, விரைவாக சார்ஜிங் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.