ரூ.1799 விலையில் டூயல் கேமரா கொண்ட ஸ்வைப் எலைட் டூயல் வெளியானது

ரூ.3999 விலையில் மிக அதிகப்படியாக வசதிகளை வழங்கும் வகையில் இரட்டை கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை ஸ்வைப் நிறுவனம் ஸ்வைப் எலைட் டூயல் மொபைல் போன் வெளியானது.

ஸ்வைப் எலைட் டூயல்

ஸ்வைப் நிறுவனம் ஜியோ ஃபுட்பால் ஆஃபர் சலுகையுடன் இணைந்து வெளியிட்டுள்ள எலைட் டூயல் ஸ்மார்ட்போன் விலை ரூ.3999 என அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜியோ 4ஜி சிம் கொண்டு டெலிகாம் சேவை பெறும் பயனாளர்களுக்கு ரூ.2200 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுவதனால் ரூ.1799 என மொபைல் விலை உறுதியாகின்றது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டு செயல்படுகின்ற எலைட் டூயல் மொபைல் போன் 5 அங்குல ஹெச்டி திரையுடன் 1280×720 பிக்சல் தீர்மானத்தை கொண்டு 1.3GHz குவாட்-கோர் பிராசஸெரை கொண்டு இயக்கப்பட்டு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளீட்டு சேமிப்புடன் வந்துள்ளது.

3,000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைல் போனில் பின்புறத்தில் இரட்டை கேமரா செட்டப் கொண்டதாக வந்துள்ளது.இவற்றில் 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் பெற்ற கேமரா மிக தரமான படங்கள் மற்றும் வீடியோவை பதிவு செய்யும் வகையில் வந்துள்ளது.

முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு கேஸ்பேக் திட்டம், ரூ.198 அல்லது ரூ.299 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு ரீசார்ஜ் சமயத்திலும் ரூ.50 மதிப்பிலான 44 கேஸ் வவுச்சர்கள் மை ஜியோ அப்ளிகேஷனில் அளிக்கப்படும். இதனை மை ஜியோ ஆப் மூலம் அடுத்தடுத்த ரீசார்ஜ் செய்யும்போது பயன்படுத்தி ரூ.50 சலுகை பெறலாம்.

இந்த சிறப்பு கேஷ்பேக் சலுகையை பயன்படுத்தாமல் மீதி தொகையை வைத்திருந்தால், மே 31, 2022 உடன் காலாவதி ஆகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Recommended For You