இந்தியாவின் ஸ்வைப் மொபைல் தயாரிப்பாளர் மிக குறைந்த விலையிலான 4ஜி VoLTE ஆதரவு அம்சத்தை பெற்றதாக ஸ்வைப் கனெக்ட் நியோ 4ஜி மொபைல் 512MB ரேம் பெற்று ரூபாய் 2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்வைப் கனெக்ட் நியோ

  • 512MB ரேம் பெற்று 8GB உள்ளடங்கிய மெமரி பெற்றதாக விளங்குகின்றது.
  • பின்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமராவில் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் வசதியை பெற்றுள்ளது.
  • 4G LTE, VoLTE ஆதரவினை வழங்கும் குறைந்த விலை மொபைலாகும்.

ஸ்வைப் வெளியிட்டுள்ள கனெக்ட் நியோ மொபைல்போனில் 4G LTE மற்றும் VoLTE போன்ற ஆதரவுகளை பெற்றுள்ள இந்த மொபைலில் 4-இஞ்ச் WVGA திரையுடன் கூடிய 480 x 800 பிக்சல் தீர்மானத்தை பெற்று 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸருடன் கூடிய 512MB ரேம் பெற்று 8GB உள்ளடங்கிய மெமரியுடன் கூடுதலாக 32 GB வரையிலான சேமிப்பு வசதியை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மெல்லா இயங்குதளத்தில் செயல்படுகின்ற கனெக்ட் நியோ 4ஜி மொபைலில் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள 5 மெகாபிக்சல் கேமராவில் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் வசதியுடன் , முன்புறத்தில் 1.3 மெகாபிக்சல் செல்ஃபீ கேமராவை கொண்டுள்ளது.

2000mAh திறனை பெற்ற பேட்டரியுடன் கூடுதல் அம்சங்களாக 4G LTE, VoLTE, வை-ஃபை 802.11/b/g/n, ப்ளூடூத், பன்பலை ரேடியோ மற்றும் மைக்ரோ யூஎஸ்பிபோர்ட் ஆப்ஷனுடன் விளங்குகின்ற இந்த மொபைல் தற்பொழுது சாப்க்ளூஸ் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றது.